Home இரகசியகேள்வி-பதில் ஆண்கள் உடலுறவுக்கு முன் க்ரீம் தடவிக் கொள்வதால் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

ஆண்கள் உடலுறவுக்கு முன் க்ரீம் தடவிக் கொள்வதால் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

147

உடலுறவு முடிந்ததும் பாத்ரூம் செல்லவில்லை என்றால் இன்ஃபெக்ஷன் ஏற்படுமா?

உடலுறவின்போது வெளியேறும் விந்து சிலமணி நேரம் உடலிலேயே இருப்பதால் எந்த இன்ஃபெக்ஷனும் ஏற்படாது. குழந்தை பெற விரும்பும் பெண்களுக்கு, உறவு முடிந்த்தும் போய் சுத்தம் செய்ய வேண்டாம்.

முக்கால் மணிநேரமாவது அதே பொசிஷனில் படுத்திருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இத்தகைய ஆலோசனை பெற்றுக் கொண்டவர்கள், உடலுறவுக்கு முன் சிறுநீர் கழிப்பது நல்லது. இல்லாவிட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, உறவுகொண்ட பின் இருந்து கொண்டேயிருக்கும். வெகுநேரம் பொறுத்துக் கொண்டிருந்தால் “யூரினரி இன்ஃபெக்ஷன்” ஏற்படலாம்.

விந்து உற்பத்தி குறைவை சரிப்படுத்த முடியுமா?

விந்து உற்பத்திக் குறைவு என்பது ஒரு குறைபாடே அல்ல. இது மிக எளிதில் சரி செய்யப்படக்கூடியது. விந்து உற்பத்தி அதிகரிக்க மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையோடு அவற்றை சாப்பிட வேண்டும்.

உடலுறவின்போது வலியும் எரிச்சலும் ஏற்படுவது எதனால்?

முதல் காரணமாக இன்ஃபெக்ஷன் இருக்கலாம். இது கிருமிகளால் ஏற்படக்கூடும். சுகாதாரமற்ற உள்ளாடைகள், மாதவிலக்கு சமயங்களில் ஈரமான நாப்கினை மாற்றாமல் வெகுநேரம் வைத்திருத்தல் போன்றவற்றால் ஏற்படக்கூடும்.

இரண்டாவது காரணம் – எண்டோமெட்ரியோஸஸ். அதாவது, உள்சுவர் வெளி வளர்ச்சி. கர்ப்பப்பையின் வெளியே இருக்கக்கூடிய சுவர் போன்ற பகுதி சிலருக்குக் கர்ப்பப்பையின் வெளியே இருக்கும். மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு வெளியேற வழி இல்லாமல் அங்கு தேங்கி, வலி ஏற்படுத்தும். எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகளும் இருக்கும். அது மாதவிடாய் முடிந்த பின்னரும் கூட நீடிக்கும். இது சரிசெய்யக்கூடிய பிரச்சனைதான். நல்ல மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.

மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?

மார்பக வளர்ச்சியில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெண்களுக்கு ஏழெட்டு வயதில் ஈஸ்ட்ரோஜென், ப்ராலேக்டின் ஹார்மோன்கள் உருவாகும். சரியான விகிதத்தில் உருவாகி, வயதுக்கு வந்ததும் முழு வளர்ச்சி அடைந்திருந்தால் மார்பகம் பெரிதாகும். இதோடு மாதவிலக்கும் ஒழுங்காக வ‌ந்தால், உங்கள் பிரச்சனையை உணவு, உடற்பயிற்சி மூலமாகவே தீர்க்கலாம். புரோட்டீன் அதிகமுள்ள பருப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள். புரோட்டீன் பவுடர், வைட்டமின் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.

மார்பு என்பது கொழுப்புகளால் சூழப்பட்ட பகுதி. எனவே கொழுப்பு அதிகமுள்ள சீஸ், ஐஸ்க்ரீம், சாக்லெட், மட்டன், முட்டை, பால் அடிக்கடி சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகலாம். செயற்கை முறையில் சிலிக்கான் என்ற பொருளைப் பொருத்தி, சர்ஜரி மூலமும் மார்பகத்தை பெரிதாக்கலாம். ஆனால் அதற்கு செலவு அதிகமாகும். எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும் எனவும் கூற முடியாது. பக்கவிளைவு ஏற்பட வாய்ப்புண்டு.

மாதவிலக்கு நின்ற பிறகு உடலுறவு வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது ஏன்?

தாம்பத்ய உறவுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது ஹார்மோன்கள். வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் அடையும் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு ஹார்மோன் சுரப்பு இருக்கும். மாதவிலக்கு நின்றதும், இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், செக்ஸில் ஆர்வம் குறைவதோடு பெண் உறுப்பின் பசைத்தன்மைக் குறைந்து இறுக்கமாகிவிடுகிறது. இதனால்தான் உறவின்போது வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது. மருந்து வகைகள், க்ரீம் போன்றவற்றின் மூலமாக இந்தக் குறைபாட்டை சரிசெய்ய முடியும். மருத்துவரை நேரடியாக அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்து வகைகளை உட்கொண்டால் நல்லது.

குள்ளமாயிருப்பது தாம்பத்தியத்தை பாதிக்குமா?

பெண்ணுக்கு 18, ஆணுக்கும் 20-22 வயதில் எலும்புகளின் வளர்ச்சி முழுமை பெறுகிறது. எனவே உயரம் அந்த வயதுக்குள் நிர்ணயமாகிவிடும். பரம்பரைவாகு என்ற ‘ஜீன்’களின் காரணமாக உயரம் அமைந்தாலும் சில உடற்பயிற்சிகளின் மூலம் ஒன்று அல்லது இரண்டு செண்டிமீட்டர் அதிகரிக்கலாம். அதுவும் 18 வயதுக்குள் மட்டுமே பயனளிக்கும். 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கு பலனளிக்காது. இதற்கென மருந்து மாத்திரைகளும் இல்லை. உயரக் குறைவை கிண்டல் செய்பவர்களை பொருட்படுத்தாதீர்கள். மகிழ்ச்சியான தாம்பத்யம் கணவன் – மனைவி புரிதலில்தான் இருக்கிறது. உயரத்திலோ அல்லது உருவத்திலோ இல்லை.

ப்ரா அணிந்து மார்பை இறுக்கமாக வைத்திருந்தால்தான் தாய்ப்பால் ஊறும்; இல்லாவிட்டால் வற்றிவிடும் என்பது உண்மையா?

ப்ரா அணியாமல் இருப்பதற்கும் பால் சுரப்பதற்கும் சம்பந்தம் இல்லை. பால் சுரக்கும்போது மார்பகங்கள் கனத்திருக்கும். அப்போது ப்ரா அணியாவிட்டால் மார்பகம் தொங்கிவிடும். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது. அதனால் அப்போது கட்டாயம் ப்ரா அணிய வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா?

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் சரிவதில்லை. பாலூட்டும்போது ப்ரா அணியாமல் இருந்திருக்கலாம். சில தாய்மார்கள் வெறும் நைட்டி மட்டும் போட்டு உள்ளே ப்ரா அணியாமல் விடுகின்றனர். இதனால் தான் வெகு விரைவாக மார்பகங்கள் சரிந்து விடுகின்றன.

இதற்கு க்ரீம், மாத்திரை, மருந்து எதுவும் பலனளிக்காது. மாறாக அவை சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தக்கூடும். பிளாஸ்டிக் சர்ஜரி மட்டுமே நிரந்தரத் தீர்வு. ஆனால் அதற்கு அதிக செலவாகும். தோற்றத்தை சரிப்படுத்த வேண்டுமானால், கம்பிகள் பொருத்தப்பட்ட ப்ரா கிடைக்கிறது. அதை உபயோகிக்கலாம்.

காம்புகளைச் சுற்றி ஏற்படும் சுருக்கத்திற்கு தோலில் போதுமான எண்ணெய்ப் பசை இல்லாததே காரணம். விக்விட் பாரஃபி எண்ணெய் நல்ல பலனளிக்கும். இதை காலையும் மாலையும் காம்புகளைச் சுற்றித் தடவினால் நாளடைவில் சுருக்கம் மறையும்.

டைட் ஜீன்ஸ் போடுவது கர்ப்பமாவதற்குத் தடையா?

ஆம், இறுக்கமான உள்ளாடைகள் அணிவது, இறுக்கமான ஜீன்ஸ் அணிவது போன்றவற்றால் வியர்வை வெளியேறும் வாய்ப்பு குறைகிறது. அதோடு உறுப்பில் ஏற்படும் தசை இறுக்கத்தாலும் அந்தப் பகுதியில் உண்டாகும் அதிக உஷ்ணத்தாலும் விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்கிறது. இதனால் கரு உருவாகாமல் போகக்கூடும்.

ஆணுக்கு விரைப்புத்தன்மை குறைவாக இருப்பது கரு உருவாவதை பாதிக்குமா?

தொடர்ச்சியான செக்ஸ் தெரபி மூலம் விரைப்பின்மையை முழுமையாக குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சையால் ஹார்மோன் குறைபாடு, விந்தணு குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். தெர்மாமீட்டரில் உடல் வெப்பம் எவ்வளவு என்று கணக்கிட்டு, அது குறிப்பிட்ட அள்வு இருக்கும்போது உடலுறவு கொண்டால் கரு உண்டாகும் என்பது வெறும் வதந்தி. அதனால் டென்ஷன் ஏற்பட்டு வழக்கமான விரைப்புகூட ஏற்படாமல் துவண்டுவிட வாய்ப்புகள் அதிகம். டென்ஷன் இல்லாமல் ஒரு சில நாட்கள் உறவு கொண்டாலே கரு உருவாக வாய்ப்பு உண்டு.

ஆண்கள் உடலுறவுக்கு முன் க்ரீம் தடவிக் கொள்வதால் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

விந்து முந்துவது, விறைப்பை நீட்டிப்பது போன்ற காரணங்களுக்காக சில ஆண்கள் க்ரீம் பயன்படுத்துகின்றனர். இதனால் பெண்களுக்கு எந்தப் பாதிப்பும் நேராது. தோல் அலர்ஜி இல்லாதிருந்தால் எந்த பாதிப்பும் நேராது. செக்ஸ் தெரப்பிஸ்டை அணுகினால், நவீன சிகிச்சை முறையில் இதுபோன்ற பலவீனங்களை சரி செய்ய முடியும். தொடர்ந்து உடற்பயற்சி செய்து வருபவர்களுக்கும் க்ரீமோ, மாத்திரைகளோ தேவைப்படாது.

முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

மறுபடியும் குழந்தை வேண்டுமானால் கருப்பையின் வடிவம், தன்மை மற்றும் முன்பு செய்த ஆபரேஷனின் விளைவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் கருப்பை குழாய்களின் தன்மை மற்றும் நீளத்தையும் கண்டறிய வேண்டும். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையினால் அடஹெஷன்ஸ் என்கிற நிலை ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

அதாவது, கர்ப்பப்பை, கருப்பை குழாய், சிறுகுடல், சிறுநீர்ப்பை ஆகியவை ஜவ்வு போன்ற இணைப்புகளால் ஒட்டிக்கொண்டிருக்கலாம். அப்படி இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும். இருந்தால், அதற்குத் தகுந்த சிகிச்சைகளை கொடுக்கலாம். இவற்றை கண்டறிய பல முறைகள் உண்டு.

சோனோ சால்பிஞ்கோகிராம் என்கிற ஸ்கேன் முறையில் அறுவை சிகிச்சை இல்லாமல் கருப்பை மற்றும் நாளத்தின் தன்மையைக் கண்டறியலாம் அல்லது லாப்ரோஸ்கோபி என்கிற முறை உதவும். அல்லது ஹிஸ்டெரோ லாப்ரோஸ்கோபி முறைலிலும் இதைக் கண்டறியலாம்.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது சினைமுட்டை வருவதைத் தடுக்க, சினைக் குழாயில் முடிச்சு போட்டுவிடுவார்கள். கர்ப்பப்பை, கருப்பை குழாய் ஆகியவை நல்ல முறையில் இருக்குமானால் ரீகேனலைசேஷன் மைக்ரோ சர்ஜரி மூலம் சினைக்குழாயில் வழி ஏற்படுத்தி, சரி செய்ய முடியும். ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவாகலாம்

சில சிறுவயது பெண்களுக்கு மார்பகங்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருப்பது ஏன்?

வயதுக்கு வந்ததும் ஈஸ்டிரோஜன் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதே வயதுக்கு மீறிய மார்பக வளர்ச்சிக்கு காரணமாகும். இரத்தத்தில் ஈஸ்டிரோஜன் அளவைக் கண்டு அதை குறைப்பதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இது இன்னும் பெரியதாகாமல் தடுக்கிறது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளலாம். ஆனால் இதற்கு நாற்பதாயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் வரை செலவாகும்.