ஆண்கள் பெரும்பாலும் தனக்கு என நினைக்கும் பட்சத்தில் தனது துணைக்கு என எதையும் பெரும்பாலும் நினைப்பதில்லை. இதனாலே தாம்பத்திய உறவு சரியான முறையில் அமையாமல் போகிறது.
எனக்கு வேண்டும் என்ற அதிகாரத்தரமான ஒரு வார்த்தை தான் கணவன் – மனைவி உறவில் விரிசல் உண்டாகவும், மனக்கசப்பு அதிகரிக்கவும் காரணியாக இருக்கிறது.
மாறாக எனக்கு விருப்பம் என தெரிவிக்கும் முன்னர், உனக்கும் விருப்பமா என துணையிடம் கேளுங்கள். இது அவசியமான ஒன்று.
இந்த விடயத்தில் நீங்கள் திருத்தம் கொண்டு வந்தால் தாம்பத்தியம் மட்டுமல்ல, உங்கள் இல்வாழ்க்கையும் சிறக்கும்.
உறவின் போது உங்கள் துணைக்கு சமநிலை, சமவுரிமை கொடுக்க வேண்டியது அவசியம்.
உனக்கு இதில் விருப்பமா, நாம் இதை செய்யலாமா, இது பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்ற பல கேள்விகளை கேளுங்கள். ஒவ்வொரு பெண்ணும் தனது துணையிடம் எதிர்பார்ப்பது இதை தான்.
வீண் அதிகார தோரணையை சற்று கழற்றி வைத்து இன்று முதலே உங்கள் துணையிடம் இந்த மாற்றத்தை காண்பிக்க தொடங்கினால் கண்டிப்பாக இல்லறத்தில் இனிமை நிறைந்து காணப்படும்.