திருமணம் என்று வந்துவிட்டாலே முதலில் ஜாதக பொருத்தம் பார்பார்கள், பிறகு குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள். இதற்க்கெல்லாம் மேல் ஆண் மற்றும் பெண்ணிடம் நல்ல இலட்சணங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். இந்த இலட்சணங்களில் அழகும் ஒரு பங்கு வகித்தாலும். அதற்கு மேலானவை நிறைய இருக்கின்றன. ஒழுக்கமாக வாழ்தல், பெரியவர்களுக்கு மரியாதை அளித்தால், கர்வம், அகம்பாவம் இல்லாமல் நடந்துக் கொள்தல் என 20 இலட்சணங்கள் இருப்பதாய் சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது. இதில் 12 இலட்சணங்கள் இருந்தால் கூட அந்த ஆணை கண்ணை மூடிக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றும் கூருகின்றனர்…
தைரியமும், பொறுமையும்
தைரியமும், பொறுமையும் இருக்க வேண்டும். எந்த ஒரு சூழலிலும் இந்த இரண்டையும் இழந்துவிட கூடாது. அது பெரிதாக இருந்தாலும் சரி, சிறிதாக இருந்தாலும் சரி.
கவனம்!
வாழ்க்கையில் எல்லா தருணத்திலும் கவனமுடன் இருக்க வேண்டும். எடுக்கும் முடிவுகளிலும், ஈடுபடும் செயல்களிலும் கவனமாக இருத்தல் அவசியம்.
நல்ல நோக்கம்!
நல்ல நோக்கங்கள் இருக்க வேண்டும். அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும்.உடல் மற்றும் சமூக ஆரோக்கியம் கொண்டிருக்க வேண்டும்.
தளர்ந்துவிடக் கூடாது!
எந்த ஒரு தருணத்திலும் தளர்ந்து விட கூடாது. கடுமை, தீர்வுக் கிடைக்கவில்லை போன்ற காரணம் கூறி நகர்ந்து விட கூடாது. கடிமையாக வேலை செய்ய தயங்க கூடாது.
பகிர்தல்!
குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பகிர்ந்துக் கொள்ளும் பண்பு இருக்க வேண்டும். அது உணவாகவோ, மகிழ்ச்சியாகவோ, பணமாகவோ எதுவாக இருப்பினும்.
காதும், இதயமும்!
சொற்களுக்கு காதையும், உணர்வுகளுக்கு இதயத்தையும் எப்போதும் தயங்காமல் கொடுப்பவனாக இருக்க வேண்டும். எதையும் முழுமையாக செய்ய வேண்டும்.
அபாயம்!
ஆபத்து அபாயங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இந்த சூழல்களை எப்படி கையாள வேண்டும் என்ற மனோப் பக்குவம் இருக்க வேண்டும்.