பொதுவாக ஆண்கள், பெண்களை செல்லம், குட்டி, டி, டா, மா, பா இது போன்று பல விதங்களில் கூப்பிடுவார்கள். ஆனால் அவை அனைத்திற்குமே ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆண்கள் பெண்களை அழைக்கும் முறைக்கான அர்த்தங்கள் என்ன?
•குட்டி – ஒரு ஆண் ஒரு பெண்ணை குடி என்று அழைத்தால், அந்த ஆண் அவளை ஒரு குழந்தைக்கு நிகராக நினைக்கிறான் என்று அர்த்தம்.
•செல்லம் – ஒரு ஆண் ஒரு பெண்ணை செல்லம் என்று அழைத்தால், அந்த ஆண் அவளை தன்னுடைய அன்புக்கு நிகராக நினைக்கிறான் என்று அர்த்தம்.
•மா – ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்த்து வாமா போமா என்று மா போட்டு அழைத்தால், அந்த ஆண் அவளை ஒரு தாயாக நினைக்கிறான் என்று அர்த்தம்.
•பா – ஒரு ஆண், ஒரு பெண்ணை வாபா, போபா என்று பா போட்டு அழைத்தால், அந்த ஆண் அவளை தந்தைக்கு நிகராக நினைக்கிறான் என்று அர்த்தம்.
•டா – ஒரு ஆண், ஒரு பெண்ணை வாடா, போடா என்று டா போட்டு அழைத்தால், அந்த ஆண் அவளை தன் தோழனுக்கு நிகராகவும், ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில் நினைக்கிறான் என்று அர்த்தம்.
•டி – ஒரு ஆண், ஒரு பெண்ணை டி என்று அழைத்தால், அந்த பெண் அவனின் மனைவி அல்லது காதலி என்று அர்த்தம். எனவே டி என்ற வார்த்தை தன்னுடைய மனைவிக்கு மட்டும் உரியது என்று நினைக்கும் எந்தவொரு ஆணும், தனது மனைவியை தவிர எந்தவொரு பெண்ணையும் டி அன்று அழைக்க மாட்டான்.