Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல்பருமன், ஆண்களுக்கு செக்ஸ் பிரச்சனைகளை ஏற்படுத்துமா?

உடல்பருமன், ஆண்களுக்கு செக்ஸ் பிரச்சனைகளை ஏற்படுத்துமா?

36

உடல் பருமன் என்பது உடலில் தேவைக்கும் அதிகமாக கொழுப்பு இருப்பதாகும். அதாவது ஒருவரின் உடல் எடை இயல்பாக இருப்பதைவிட 20% அல்லது அதற்கும் கூடுதலாகிவிட்டால் உடல்பருமன் ஏற்படும். ஒருவரின் BMI (உடல் எடை குறியீட்டு எண்) 30 அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் அவர்/அவள் உடல் பருமனுடன் இருக்கிறார் என்று அர்த்தம். BMI ஆனது ஒருவரின் உடல் எடை (கிலோகிராமில்) மற்றும் உயரத்தின் இருமடங்கை (மீட்டரில்) வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது (kg/m2).
கூடுதல் உடல் எடையானது இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணியாக மட்டுமல்லாமல் செக்ஸ் வாழக்கையையும் பாதிக்கிறது. உடல் பருமன் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலர்களையும் பாதிக்கிறது. எனினும் கூடுதல் எடை ஆண்களின் ஹார்மோன் மற்றும் புரோஸ்டேட் சுகாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

டெஸ்டோஸ்டிரோன் நிலை:
பாலியல் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவை உடல் பருமன் குறைக்கிறது. ஆண்குறியின் திசுவிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க டெஸ்டோஸ்டிரோன் தேவைப்படுவதால், குறைக்கப்பட்ட டெஸ்டோஸ்டிரோன் அளவு ஆண்குறியின் விறைப்படையும் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

விறைப்பின்மை (ED):
விறைப்பின்மை என்பது ஆண்கள் எதிர்கொள்ளும் நாள்பட்ட பாலியல் தொடர்பான பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக விறைப்பின்மை என்பது உடலுறவின்போது ஆண் உறுப்பு போதிய அளவு விறைப்படையாமல் போவதாகும்.இது பல காரணங்களால் ஏற்படக்கூடும் என்றாலும், உடல் பருமன் மற்றும் விறைப்பின்மை இரண்டிற்கும் இடையே வலுவான தொடர்புள்ளது.
சாதாரண எடையுள்ள ஆண்களை விட குறைந்தது இரண்டரை மடங்காவது விறைப்பின்மையால் பாதிப்பதற்கான வாய்ப்பு, பருமனான ஆண்களுக்கு அதிகம் இருக்கிறது. உடல் பருமனானது இரத்த நாளங்களை சேதப்படுத்துதல், டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்தல் மற்றும் உடலில் அழற்சி ஏற்படுத்துதல் மூலம் விறைப்பின்மையை ஏற்படுத்தலாம். மேலும் உடல் பருமனான ஆண்களுக்கு அதிக கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருக்கக்கூடும். இது அனைத்து விறைப்பின்மை ஏற்பட வழிவகுக்கும்.

உளவியல் தாக்கம்:
குறைக்கப்பட்ட டெஸ்டோஸ்டிரோன் அளவுகள், ஆண்களின் புணர்ச்சித் திறன், மன அழுத்தம் மற்றும் ஆற்றலைக் குறைக்கக்கூடும்.மேலும் இந்த காரணிகள் திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கையை அடைவதற்கான உங்கள் ஆசை மற்றும் திறனைத் தடுக்கிறது.

கருவுறாமை:
உடல் பருமன், விந்தணுக்களின் இயக்கம் மற்றும் எண்ணிக்கை குறைய வழிவகுக்கலாம். இந்த இரண்டும் காரணிகளும் மனிதனை சத்துக்குறைந்தவராக மாற்றக்கூடும்.

புரோஸ்டேட் அதிகரித்தல்:
புரோஸ்டேட் சுரப்பி, பொதுவாக வயதைக் கொண்டு அதிகரிக்கிறது. இருப்பினும், உடல் பருமனான ஆண்களுக்கு அதிகளவில் அதிகரிக்கிறது.

நல்ல செய்தி
உடல் பருமனால் ஏற்படக்கூடிய பாலியல் தொடர்பான பிரச்சனைகளுடன் தொடர்புடைய காரணிகள் சில, மீளக்கூடியவை அல்லது சமாளிக்கக்கூடியவை என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.உதரணமாக, சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் விறைப்புத்தன்மையை மேம்படுத்தலாம். உடல் எடையைக் குறைக்கும் ஆண்களுக்கு, தங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் இணைந்து விறைப்புத்தன்மை மற்றும் பாலியல் அனுபவம் ஆகியவை மேம்படுகின்றன.

எனவே உடல் பருமன் மற்றும் விறைப்பின்மையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், திட்ட நடவடிக்கைகள் மூலம் உடல் எடையைக் குறைக்க இன்றே முடிவெடுங்கள். தினமும் சரியான உணவை உண்டு அதற்கேற்ற பயற்சிகளை செய்யத் தொடங்குங்கள்.