பெண்களை விட ஆண்களுக்கு அவர்களின் இனப்பெருக்கம் நீண்ட நாட்கள் வரை நிலைத்து இருக்கும் என்பது உண்மை தான்.
ஆனால் ஆண்களின் இனப்பெருக்கமானது, அவர்களின் எந்த வயது வரை நிலைத்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆண்கள் விந்தணுக்கள் வீழ்ச்சி அடையும் வயது என்ன?
ஆண்கள் அவர்களின் ஒவ்வொரு வயதைக் கடக்கும் போதும், அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் இயக்கம் குறைந்து, இனப்பெருக்கத்திலும் பாதிப்புகள் ஏற்படும்.
வயது அதிகமான ஆண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆட்டிஸத்திற்கான வாய்ப்பு அதிகம் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் அவர்களின் குறைவான இனப்பெருக்கத் திறனாகும்.
ஆண்களுக்கு 40 வயதிற்கு மேல் ஆன பிறகு கருத்தரிப்பதில் ஈடுபட்டால், பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வில் கூறுகிறார்கள்.
ஆண்களுக்கு 45 வயதை தாண்டி விட்டால், அவர்கள் குழந்தைப் பெறும் வாய்ப்புகள் அதிகமாக குறைகிறது. மேலும் முக்கியமாக தம்பதிகளில் பெண் இளமையாகவும், ஆண் 45 வயதினராக இருந்தால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படுகிறது.