Home பாலியல் வாய்வழி குதப் புணர்ச்சி பாதுகாப்பானதா?

வாய்வழி குதப் புணர்ச்சி பாதுகாப்பானதா?

79

ஆங்கிலத்தில் ‘ரிம்மிங் ஜாப்’ ‘ரிம் ஜாப்’ என்று குறிப்பிடப்படும் வாய்வழி குதப் புணர்ச்சி என்பது ஆசனவாயை முத்தமிடுதல், நக்குதல் அல்லது நாக்கை நுழைத்தல் போன்ற செயலைக் குறிக்கிறது.
அந்த பகுதியில் பல முக்கியமான நரம்பு முடிச்சுகள் உள்ளன, எனவே அந்த பகுதியில் நாக்கு படும்போது மிகவும் கிளர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இந்தப் பகுதி பாக்டீரியாக்கள் தங்கிப் பெருகும் முக்கியமான இடம், இந்த செயலால் நோய்கள் கூடப் பரவலாம்.
இதில் ஆபத்துகள் ஏதும் உள்ளதா?

உரிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றாமல் இவ்வகைப் புணர்ச்சியில் ஈடுபட்டால், பால்வினை நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இதில் ஈடுபடுபவர்களுக்கு ஈறுகளில் இரத்தக் கசிவு, திறந்திருக்கும் காயங்கள், மூல நோய் அல்லது பிற பால்வினை நோய்கள் இல்லாதபட்சத்தில் இதனால் ஏற்படும் அபாயங்கள் மிகக் குறைவுதான்.
பிற பால்வினை நோய்கள் இருந்தால் அல்லது உங்களுக்கோ உங்கள் இணையருக்கோ எச்.ஐ.வி. நிலை என்ன என்பது தெரியாமல் இருக்கும்பட்சத்தில், அபாயம் மிக அதிகம்.

நீங்கள் ஒருவருடனே நீண்ட காலமாக பாலியல் உறவில் இருந்து வருகிறீர்கள் எனில், உங்களுக்கும் உங்கள் இணையருக்கும் ஆசனவாய்ப் பகுதியிலும் குடல் பகுதியிலும் ஒரே வகையான பாக்டீரியாக்களே இருக்கலாம். ஆகவே அபாயங்கள் குறைவு. ஆனால் புதிய ஒருவரிடம் இதைச் செய்யும்போது ஆபத்து அதிகம்.
இவ்வகைப் புணர்ச்சியின்மூலம் பின்வருபவை போன்ற நோய்த்தொற்றுகள் பரவக்கூடும்:
வெட்டை நோய்
சிவிலிசு நோய்
கிளமீடியா
படர்தாமரை (ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் 1 & 2)
இனப்பெருக்க உறுப்பு மருக்கள் (ஹியூமன் பாப்பிலோமாவைரஸ்)
ஹெப்படைட்டஸ் A
ஹெப்படைட்டஸ் B
ஹெப்படைட்டஸ் AC
எ. கோலை
ஒட்டுண்ணிகள் (அமீபியாசிஸ், ஜியார்டயாசிஸ் போன்றவை)

இந்த அபாயங்களை எப்படிக் குறைப்பது?
தடுப்பு முறையைப் பயன்படுத்தலாம்: டென்டல் பாம், பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தலாம் அல்லது இதில் ஈடுபடும் முன்பு ஓர் ஆணுறையை வெட்டி ஆசனவாய்ப் பகுதியில் வைக்கலாம்.
உங்கள் வாய் ஆரோக்கியமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்: வாயில் அல்லது வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் காயங்கள் இருந்தால், ஈறுகளில் இரத்தக்கசிவு இருந்தால், திறந்திருக்கும் காயங்கள் இருந்தால், பால்வினை நோய்த்தொற்றுகள் வரும் அபாயத்தைக் குறைப்பதற்காக வாய்வழிக் குதப் புணர்ச்சியைத் தவிர்ப்பது நல்லது.
முன்னதாக, ஆசனவாயை சுத்தம் செய்யவும்: ஆசனவாய்ப் பகுதியில் மிகச்சிறு அளவில் மலம் இருக்கக்கூடும். மென்மையான சோப்பு போட்டு ஆசனவாயைக் கழுவவும், பிறகு மென்மையான துணியைக் கொண்டு துடைத்து சுத்தம் செய்யவும். ஆசனவாய்ப் பகுதியில் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தாத மென்மையான தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் அப்படி அரிப்போ வெட்டுக் காயமோ ஏற்பட்டால் அதனால் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆசனவாயிலிருந்து இனப்பெருக்க உறுப்பை நோக்கிச் செல்ல வேண்டாம்: சிலர் பெண்ணுறுப்பில் வாய்வழிப் புணர்ச்சி செய்வார்கள் அல்லது ஆணுறுப்பைக் கொண்டு வாய்வழிப் புணர்ச்சி செய்வார்கள். இப்படிச் செய்வதால் ஆசனவாய்ப் பகுதியில் இருக்கும் பாக்டீரியா இனப்பெருக்க உறுப்புப் பகுதிக்கு வந்து சிறுநீர்ப் பாதையை அடைந்து அங்கு நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.
மவுத்வாஷ் பயன்படுத்தலாம்: ரிம்மர், அதாவது வாயைப் பயன்படுத்துபவர், செயலில் ஈடுபட்ட பிறகு மவுத் வாஷ் பயன்படுத்துவதன் மூலம் வாயை வந்தடைந்த பாக்டீரியாக்களை அகற்றலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
தடுப்பூசி: ஹெப்படைட்டஸ் A, ஹெப்படைட்டஸ் B ஆகிய தடுப்பூசிகள் உள்ளன.தடுப்பூசிகள்: ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் தடுப்பூசியும் உள்ளது.
வாய்வழி குதப் புணர்ச்சியின் போது ஆசன வாய்ப்பகுதியில் இருக்கும் உணர்திறன் மிக்க நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு மிகுந்த இன்பம் கிடைப்பதால், பலருக்கு இந்த வாய்வழி குதப் புணர்ச்சி பிடிக்கலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆசனவாய்ப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகள் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டக்கூடியவை. இதனால், கூடுதல் இன்பம் கிடைக்கும். எனினும், பால்வினை நோய்த் தொற்றுகள், பிற குடல் நோய்த்தொற்றுகள் அல்லது பிற பிரச்சனைகளைத் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.