ஈ மெயில் மூலமாக அமெரிக்க பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பல்கலைகழக ஆசிரியரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ஓஸ்மானியா பல்கலைகழகத்தில் 34 வயதான மனோகர் டேவிட் மேத்யூஸ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக உள்ள இளம்பெண்ணிற்கு தொடர்ந்து ஈ மெயில்கள் அனுப்பியுள்ளார்.அந்த பெண்ணை காதலிப்பதாகவும்,அவரோடு உடலுறவு கொள்ள வேண்டும் எனவும் மனோகர் அந்த ஈ மெயிலில் தெரிவித்து வந்துள்ளார்.
ஆனால் இது போன்ற ஈ மெயில்களை அனுப்ப வேண்டாம் எனவும் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும் அந்த அமெரிக்க இளம்பெண் தெரிவித்துள்ளார்.ஆனாலும் மனோகர் மீண்டும் னமெயில்கள் அனுப்பி வந்துள்ளார்.இதனால் கோபமடைந்த அந்த அமெரிக்க பெண்,மனோகர் மீது சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அமெரிக்க இளம்பெண் ஹைதராபாத்தில் உள்ள EFLU பல்கலைகழகத்தில் 2007-ஆம் ஆண்டு முதுகலை பிரெஞ்ச் படிக்கும் போது,மனோகர் அதே பல்கலைகழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்துள்ளார்.அப்போது கிடைத்த பழக்கத்தைக் கொண்டு பல ஆண்டுகளுக்கு பிறகு,அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து மனோகரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.