மிகவும் பிரபலமான அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, தனது 30 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரிஹானா தனது பாடல்களைக் காட்டிலும், தனது ஃபேஷன் உடைகளாலும் தான் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் எனலாம். ஏனெனில் அந்த அளவில் ரிஹானா அணியும் உடைகள் அனைத்தும் இருக்கும். சொல்லப்போனால், ரிஹானாவிற்கு பெண் ரசிகர்களை விட ஆண் ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம். ரிஹானாவிற்கு வித்தியாசமான ஃபேஷன் டேஸ்ட் கொண்டவர். இவர் எந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போதும், அந்த விழாவில் உள்ள அனைவரது கண்களும் இவர் மீது படும்படியான உடைகளையே தேர்ந்தெடுத்து அணிந்து வருவார்.
அதுவும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, தனது உடல் அங்கங்கள் அப்படியே வெட்டவெளிச்சமாக காண்பிப்பது போன்ற உடைகள் மற்றும் கிட்டத்தட்ட நிர்வாணமாய் வருவது போன்ற உடைகளை அணிந்து வந்து, அங்குள்ளோரை மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாக்குவார். இப்படி தனது உடல் மற்றவர்களுக்கு தெரியும்படியான உடை அணிந்து வர ஒரு தைரியம் மற்றும் துணிச்சல் வேண்டும். இது ரிஹானாவிடம் அதிகம் உள்ளது எனலாம். மேலும் இவர் அணிந்து வரும் உடைகள் குறித்து மற்றவர்கள் என்ன சொன்னாலும், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், தனக்கு விருப்பமான உடையையே எப்போதும் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார். இக்கட்டுரையில் அமெரிக்க பாப் பாடகி இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது மேற்கொண்டு வந்த சில மூர்க்கத்தனமான தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.