பெண்கள் அழும் போது அதில் இருந்து வெளியாகும் ஒருவித ரசாயனம் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் சுரப்பினை கட்டுப்படுத்தி அவர்களுக்கு மூடு அப்செட் ஆக்கிவிடுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களின் ஆயுதம் கண்ணீர். சின்ன பிரச்சினை என்றாலும் பொல பொலவென கண்ணீரை உதிர்த்து காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். ஆனால் இந்த ஆயுதம்தான் ஆண்களின் உணர்ச்சியையே கேள்விக்குறியாக்கி வருகிறது. இதனால் ஆண்கள் மூடு அப்செட் ஆகி சுருண்டு படுத்துக் கொள்கின்றனராம். கண்ணீரில் இருந்து வெளியாகும் ஒருவித ரசாயனம்தான் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் சுரப்பினை தடுத்துவிடுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அழுகை என்பது உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு சாதனம். அழுவதன் மூலம் கண்களில் உள்ள தூசிகள் வெளியாகிவிடுகின்றன. மனபாரம் குறைவதோடு கண்களுக்கும் நன்மையை ஏற்படுத்துகிறது. லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இது கிருமி நாசினியாக செயல்படுகிறது. அதேசமயம் பெண்கள் அழும் போது அதை காணும் ஆண்களுக்கு செக்ஸ் உணர்ச்சிகள் தடுக்கப்படுகின்றன என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆண்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் அழும் பெண்களை காணும் ஆண்களுக்கு மூளையில் செக்ஸ் கிளர்ச்சியை தூண்டும் பகுதி சுருங்கிவிடுகிறது. இதன் காரணமாக செக்ஸ் ஹார்மோன் சுரப்பதும் கட்டுபடுத்தப்படுகிறது. எனவே பெண்களே மற்றநேரத்தில் அழுவது காரியத்தை சாதிக்க உதவும். அதேசமயம் படுக்கை அறையில் அழுவது காரியத்தை கெடுத்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள் ஜாக்கிரதை.