Home பெண்கள் அழகு குறிப்பு உங்கள் மேனியின் சிகப்பழகைக் கூட்டணுமா?

உங்கள் மேனியின் சிகப்பழகைக் கூட்டணுமா?

32

நாம் எல்லோருமே சிவப்பு மேனியைத் தான் விரும்புகிறோம். நம்மை விட சிவப்பானவர்கள் யாரேனும் கடந்து போனால் அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதும் உண்டு. சில சிம்பிள் வழிமுறைகளைப் பின்பற்றி, உங்களாலும் உங்கள் மேனியை மெருகூட்டிக் கொள்ள முடியும்.

பால் மற்றும் தேன்

பல்வேறு சருமப் பிரச்னைகளைத் தீர்த்து, உங்கள் சருமத்தில் பல அதிசயங்களை நிகழ்த்தும் வல்லமை கொண்ட இரண்டு பொருட்கள் பாலும் தேனும் தான். தினமும் பாலும் தேனும் சருமத்துக்குப் பயன்படுத்தி வந்தால் விரைவிலேயே முகத்தில் இரும்கும் கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து போகும்.

1 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் பால் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி, அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கு

எலுமிச்சை ஆன்டி- பாக்டீரியலாகப் பயன்படுகிறது. உருளைக்கிழங்கு சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். அதோடு கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையத்தையும் போக்குகிறது. உருளைக்கிழங்கை தோலுடன் அரைத்து, எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

ஓட்ஸ் ஃபேஸ்பேக்

ஓட்ஸ் தொப்பையைக் குறைப்பதற்காக மட்டும் பயன்படுவதில்லை. முகத்துக்கும் பயன்படுத்தலாம். கருமை படிந்த முகத்துக்கு ஓட்ஸ் பேக் சிறந்த தீர்வாக அமையும். இரண்டு ஸ்பூன் ஓட்ஸை பொடியாக்கிக் கொண்டு, அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி நன்கு காயவிட்டுப் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

பால் மற்றும் கடலைமாவு

கடலைமாவு முகத்திலுள்ள கருமையைப் போக்கவல்லது. பால் முகத்திலுள்ள அழுக்குகளை நீக்கும். இவை இரண்டையும் கலந்து, தேவைப்பட்டால் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து, முகத்துக்கு பேக் போடலாம். முகம் பளபளப்பதை உங்களாலேயே கண்கூடாகப் பார்க்க முடியும்.