Home பெண்கள் அழகு குறிப்பு 5 நிமிடத்தில் இந்த இரண்டு பொருட்களும் அக்குளில் உள்ள முடியை நீக்கிவிடுமாம்..

5 நிமிடத்தில் இந்த இரண்டு பொருட்களும் அக்குளில் உள்ள முடியை நீக்கிவிடுமாம்..

29

பெண்கள் பட்டுப்போன்ற சருமம் வேண்டுமென்று தங்கள் கை, கால் மற்றும் அக்குளில் உள்ள ரோமத்தை எல்லாம் நீக்குவார்கள். மேலும் ரோமத்தை நீக்க ஷேவிங், வாக்சிங் போன்றவற்றை மேற்கொள்வார்கள். குறிப்பாக அக்குளில் உள்ள முடியை நீக்க பெரும்பாலானோர் ஷேவிங் தான் செய்வார்கள்.
இப்படி ஷேவிங் செய்வதால், பலருக்கு அக்குளில் அரிப்புக்கள் மற்றும் எரிச்சல்கள் போன்றவை ஏற்படும். ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் அக்குளில் உள்ள முடியை நீக்கலாம்.

சமையலறைப் பொருட்கள்அக்குளில் உள்ள முடியை இயற்கை வழியில் நீக்க உதவும் அந்த இரண்டு சமையலறைப் பொருட்கள் தான் எலுமிச்சை மற்றும் சர்க்கரை.

செய்யும் முறை 2 டீஸ்பூன் எலுமிச்சை மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரையை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். எவ்வளவு காலம் செய்ய வேண்டும்? இந்த சிகிச்சையை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும்.

இப்படி செய்து வந்தால், அக்குளில் வளரும் முடியின் வளர்ச்சி குறைந்து, நாளடைவில் முடி வளர்வதே நின்றுவிடும். மற்றொரு முறை வேண்டுமானால் எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, அக்குளில் தடவி 15 நிமிடம் கழித்து, ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

இந்த முறையின் மூலமும் அக்குள் முடியை நிரந்தரமாக தடுக்கலாம். குறிப்பு எலுமிச்சையை சருமத்திற்குப் பயன்படுத்திய பின், தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள்.

இதனால் எலுமிச்சையால் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கலாம். முக்கியமாக இந்த முறையை அக்குளில் மட்டுமின்றி, கை, கால்களில் வளரும் முடியை நீக்கவும் பயன்படுத்தலாம்.