Home பாலியல் வயது முதிர்வு, ஆண்களின் செக்ஸ் வாழக்கையை எப்படிப் பாதிக்கிறது? : விளக்கங்களுடன்

வயது முதிர்வு, ஆண்களின் செக்ஸ் வாழக்கையை எப்படிப் பாதிக்கிறது? : விளக்கங்களுடன்

33

செக்ஸ் வாலிபர்களுக்கு மட்டுமல்ல. 70 அல்லது 80 வயதுள்ள ஆண்களும் தங்கள் பாலியல் வாழ்க்கையை அனுபவிப்பதற்காக உடலுறவில் ஈடுபடுவதை தொடரலாம்.

ஆண்களின் வயது முதிர்வால், பாலியல் ஆசைகள் அவர்களின் 20 வயதுகளில் இருந்தது போல இருக்காது. இருப்பினும், செக்ஸ் என்பது அவர்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய அனுபவமாக இருக்கக்கூடும்.

முதுமையடைதல் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் உடல்மாற்றங்களை ஏற்படுத்தும் இயற்கை செயல்பாடாகும்.

இந்த மாற்றங்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கான திறனை பாதிக்கும். வயது சார்ந்த டெஸ்டோஸ்டிரோன் குறைவால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றங்கள்:

ஆண்குறி விறைப்புத்தன்மை, முன்பிருந்தது போல் அல்லாமல் பெரியளவில் இருத்தல்
விறைப்புத்தன்மை பெற நீண்ட நேரம் தேவைப்படுதல்
குறுகிய நேர புணர்ச்சிப் பரவசநிலை
விந்து வெளியேறும் வேகம் குறைதல்
விந்து அளவு குறைதல்
ஃபோர்ப்ளே மேலும் கூடுதலாக தேவைப்படுதல்
புணர்ச்சிப் பரவசநிலையை அடைந்தவுடன் விரைவாக விறைப்புத்தன்மையை இழத்தல்
ஆண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும் வயதுதொடர்பான நிலைமைகள் எவை? (Which age-related conditions lead to sexual problems in men)

ஆண்களின் பாலியல் வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் குறிப்பிட்ட சில நோய்கள் மற்றும் நிலைமைகள் பின்வருமாறு:

கீல்வாதம் (Arthritis):

கீல்வாதத்தால் ஏற்படும் மூட்டுவலி காரணமாக பாலியல் செயல்பாடு சிரமமாகலாம். வலி மற்றும் முடங்கியிருத்தலிலிருந்து விடுபட மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். போதுமான ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் வெவ்வேறு நிலைகளில் முயற்சி செய்தல் ஆகியவை பாலியல் செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும்.

நீரிழிவு நோய் (Diabetes):

ஆண்களுக்கு ஆண்மையிழப்பு ஏற்பட வழிவகுக்கும் நோய்களில் நீரிழவு நோயும் ஒன்றாகும். மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதின் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்து நிலைமையை மேம்படுத்தலாம்.

இதய நோய்கள் (Heart diseases):

பெருந்தமனி தடிப்பு (இரத்த நாளங்கள் கடுமையடைந்து சுருங்குதல்) மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை, ஆண்களுக்கு விறைப்படைதல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும். மாரடைப்பும், ஆண்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான திறன் மற்றும் ஆசையைக் குறைக்கும். உடலுறவில் ஈடுபடுதல் இன்னொரு மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கலாம்.

அடக்க முடியாமை (Incontinence):

சிறுநீரை அல்லது சிறுநீர் கசிவைக் கட்டுப்படுத்த முடியாமல் போதல் முதுமையில் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனையாகும். உடற்பயிற்சி செய்யும்போது, இருமும்போது, தும்மும்போது அல்லது கனமான பொருட்களை தூக்கும்போது உண்டாகக்கூடிய அழுத்தம் காரணமாக சிறுநீர் அடக்க முடியாமை ஏற்படுகிறது. உடலுறவின்போது அடிவயிற்றில் உண்டாகும் கூடுதல் அழுத்தத்தாலும் இது ஏற்படுகிறது. சிறுநீர் அடக்க முடியாமை பிரச்சனையால், பாலியல் செயல்பாடு தொடர்பான ஆர்வத்தை அவர்கள் இழக்க நேரிடும்.

பக்கவாதம் (Stroke):

பக்கவாதத்தால் ஆண்குறி விறைப்படைதலில் சிக்கல் ஏற்படலாம். பக்கவாதத்தால் ஏற்படும் பலவீனம் பாலியல் செயல்பாடுகள் மீதான ஆசையை அடியோடு அழித்துவிடும். எனினும், மருந்துகள் மற்றும் வெவ்வேறு நிலைகளில் முயற்சித்தல், அவர்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை மீண்டும் பெற உதவலாம்.

சுக்கிலவெடுப்பு (Prostatectomy):

சுக்கிலவெடுப்பு என்பது அறுவை சிகிச்சையாகும். இந்த அறுவை சிகிச்சையில் புரோஸ்டேட் சுரப்பியின் அனைத்து பகுதியும் அல்லது ஒரு பகுதி நீக்கப்படும். வழக்கமாக புரோஸ்டேட் விரிவடையும்போது இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது சிறுநீர் அடக்க முடியாமை அல்லது ஆண்மையின்மை ஏற்பட வழிவகுக்கலாம்.

மருந்துகள் (Medications):

சில மருந்துகள் பாலியல் திறன் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அந்த மருந்துகளில் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், உளச்சோர்வு போக்கிகள், பசியின்மையை அடக்குபவைகள் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள் ஆகியவை உள்ளடங்கும். இந்த மருந்துகள், ஆண்மையின்மை ஏற்பட வழிவகுக்கும் அல்லது ஆண்களுக்கு விந்து வெளியேற்றுதலில் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.

மது (Alcohol):
அளவுக்கு அதிகமாக மது உட்கொள்ளுதல், ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதை சரிசெய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் (What can you do?)

பாலியல் செயல்பாடுகள், நீங்கள் இளமையாக இருந்தபோது எப்படி இருந்ததோ அதே போன்று இருக்காது. எனினும் ஒருவர் வாழ்வில் திருப்தியடையவும் தனது துணையுடன் உறவில் நெருக்கமாக இருக்கவும் உடலுறவு முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சில குறிப்புகள்:

துணைவருடன் மனம்விட்டு பேசுங்கள். செக்ஸ் பற்றி பேசுதல் கொஞ்சம் கடினம்தான். ஆனாலும் உங்கள் ஆசைகள் மற்றும் கவலைகள் குறித்து துணைவருடன் பேச முயற்சி செய்யுங்கள். ஒருவருக்கொருவர் கவலைகளைப் புரிந்துகொண்டு, நிறைவான பாலியல் வாழ்க்கைப் பெற இந்த உரையாடல் உதவக்கூடும்.

பாலியல் ஆய்வாளரை சந்தியுங்கள். பாலியல் ஆய்வாளர் அல்லது வல்லுநர், குறிப்பிட்ட பாலியல் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து திருப்திகரமான உறவைப் பெற உங்களுக்கு உதவலாம்.

மற்ற வழிகளை முயற்சித்துப்பாருங்கள். பாலியல் செயல்பாடுகளில் திருப்தி அடைவதற்கான ஒரே வழி உடலுறவு மட்டுமல்ல. கட்டியணைத்தல், முத்தமிடுதல் மற்றும் நெருக்கமான தொடர்புகள் போன்றவையும் உடலுறவிற்கு நிகரான மகிழ்ச்சியை உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் ஏற்படுத்தும்.

செய்துப்பாருங்கள். உடலுறவில் ஈடுபடும்போது மேற்கொள்ளும் வழக்கமான முறைகளில் எளிய மாற்றங்களைச் செய்வதின் மூலம் உங்களின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். இரவில் உடலுறவு வைத்துகொள்வதைவிட காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சியாக இருக்கும்போதே உடலுறவில் ஈடுபட முயற்சித்துப்பாருங்கள். உங்கள் வசதிக்கேற்ப புதிய பாலியல் நிலைகளை முயற்சித்துப்பாருங்கள். உடலுறவின்போது கிளர்ச்சியடைய நீண்ட நேரம் ஆகும் என்பதால், அந்த மனநிலையை வரவழைப்பதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள். சத்தான உணவை உண்ணுங்கள், தண்ணீர் அதிகமாக குடியுங்கள், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிருங்கள்.

முதுமை, உங்கள் பாலியல் வாழ்க்கையில் நிச்சயமாக மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்காக உங்கள் பாலியல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டுமென்று அர்த்தம் இல்லை. உடல் மற்றும் மன மாற்றங்களுக்கு ஏற்ப உங்களை மாற்றிகொள்வதின் மூலம், முதுமையிலும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பாலியல் வாழ்க்கையை அனுபவிக்கலாம். பாலியல் நிபுணர் மற்றும் உங்கள் துணைவரின் உதவியுடன், தளர்வடையாமல் அந்த நோக்கத்தை அடையச் செயல்பட வேண்டும். அதுதான் முக்கியம்.