Home சூடான செய்திகள் வயது குறைந்த ஆணை பெண்கள் காதலிக்க காரணம்

வயது குறைந்த ஆணை பெண்கள் காதலிக்க காரணம்

49

நமது சமூகத்தில் பல விஷயங்கள் இப்படி தான் செய்ய வேண்டும், இப்படி தான் நடக்க வேண்டும், இல்லையேல் பெரும் குற்றமாக கருதப்படும். அவற்றுள் ஒன்று தான், பெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆணை தான் திருமணம் செய்துக்க் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களது உறவு ஆரோக்கியமாக இருக்காது என்று கருதுகிறார்கள்.

இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்களை கடைப்பிடிக்கும் ஒரு பெரிய தேசத்தில், திருமணம் என்று வரும் போது இந்த முறை துனித்துவமாக அனைவர் மத்தியிலும் ஒரே மாதிரி கடைப்பிடிக்கப்படுவது ஆச்சரியமான விஷயம் தான். இதன் பின்னணியில் சில அறிவியல் காரணங்களும் கூறப்படுகின்றன.

அதாவது, மனம் மற்றும் உடல் ரீதியாக திருமண உறவில் ஆணை காட்டிலும் பெண் வயது குறைவாக தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதுவும் ஐந்தில் இருந்து எட்டு ஆண்டுகள் வரை. காரணம், ஒரு 18 வயது பெண்ணுக்கும், 23 வயது ஆணுக்குமான மன ரீதியான முதிர்ச்சி சம அளவில் இருக்கிறதாம். அதே போல, உடல் ரீதியாக தாம்பத்திய உறவின் ஆரோக்கியமானது 50 வயதிலான பெண்ணுக்கும், 60 வயதிலான ஆணுக்கும் சம அளவில் இருக்கிறதாம்.

ஆனால், இன்று இதை எல்லாம் யாரும் கண்டுக் கொள்வதில்லை. மேலும், இன்று தம்பதிகள் மத்தியில் உடலுறவு மீதான ஆர்வம் நாற்பதுகளிலேயே குறைந்துவிடுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு வேலை பளு, வளர்ச்சி, முன்னேற்றம் போன்ற குறிக்கோள்கள் காரணமாக இருக்கின்றன என்றும் கூறுகிறார்கள்…

ஆனால், இன்று வயது உறவுக்கு ஒரு தடையாக இருப்பது இல்லை. இப்படியான சூழலில் தன்னைவிட எட்டு வயது இளைய ஆணை காதலித்து வரும் பெண் ஒருவர் தங்கள் உறவில் இருக்கும் வித்தியாசத்தை வாக்குமூலமாக போட்டு உடைத்துள்ளார். அவர் பகிர்ந்துக் கொண்ட விஷயங்கள்…
ஆச்சரியம்!
இந்தியா போன்ற நாட்டில் இன்றும், ஒரு பெண் தன்னைவிட வயது இளைய ஆணை காதலிப்பது ஆச்சரியமாக தான் காணப்படுகிறது. முக்கியமாக பெற்றோர் மற்றும் உறவினர்கள். இவர்கள் எல்லாம் எங்கள் உறவு ஆரோக்கியமானதாக இருக்காது என்று கருதினார்கள்.

மேலும், ஒரு பெண் தன்னைவிட வயது அதிகமான ஆணுடன் உறவு வைத்துக் கொண்டால் தான் சிறந்தது என்றும் கருதுகிறார்கள். ஆனால், அவர்கள் எண்ணம் எல்லாம் பொய் என நிரூபிக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நான் (34), என் காதலனுடன் (26) சிறந்த உறவில் இருந்து வருகிறேன்.

ஆரம்பத்தில்…
ஆரம்பத்தில் எனக்கு அவன் மீது கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அப்போது தான் நான் அவனுடன் வெளியே செல்ல ஆரம்பித்த நாட்கள். என் தோழி, தோழர்கள். அவனது தோழி, தோழர்கள் என நாங்கள் அனைவரும் கூட்டமாக பல இடங்களுக்கு சென்று வருவோம்.

மேலும், அந்த ஒட்டுமொத்த கூட்டத்தில் நான் தான் மூத்த வயதானாவளாக இருந்தேன். இது எனக்கு கொஞ்சம் அசௌகரியத்தை உண்டாக்கியது.

ஏற்றத்தாழ்வு!
உங்கள் காதலன் சரியானவனாக இருந்தால்… உங்களை எப்போதும் பாதுகாப்பின்மை உணர செய்ய மாட்டான். என் காதலனும் அப்படி தான். வயது ஏற்றத்தாழ்வு தவிர எங்களுக்குள் வேறு எந்தவொரு ஏற்றத்தாழ்வும் இல்லை.

ஒருபோதும் என்னை அவன் அசௌகரியமாகவோ அல்லது பாதுகாப்பு இன்றியோ உணர செய்தது இல்லை. அவன் பேசும் விதம், அக்கறை எடுத்துக் கொள்வது என அனைத்தும் அவனை மென்மேலும் காதலிக்க தூண்டுகிறது.

காரணம்!
இளைய ஆணை ஏன் காதலிக்க வேண்டும் என்று யாராவது என்னிடம் கேட்டாள், நான் நிச்சயம் அவனை (என் காதலன்) தான் கை காண்பிப்பேன். அவனிடம் என்றுமே எனர்ஜி குறைந்ததே இல்லை. அவனது ஆர்வம், நம்பிக்கை அனைத்தும் என்றுமே முழுமையாக இருக்கும். அவன் எப்போதுமே தனது வாழ்வில் எதையும் முழுமையாகவும், புதியதாகவும் செய்ய முற்படுகிறான்.

இது எங்கள் உறவை எப்போதுமே சுவாரஸ்யமாகவும், புத்துணர்ச்சிவுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது. நான் அவனது அவையத்தில் அக்கறையற்று இருந்துவிட்டேனோ என்று எண்ண தூண்டுகிறான். ஆனால், இன்று அவனுடன் நான் அனுபவிக்காமல் விட்டதை எல்லாம் அனுவிப்பதாக உணர்கிறேன். நாங்கள் ஒரு மாடர்ன் ஜோடி என்பதை மகிழ்ச்சியாக கூறிக் கொள்கிறேன்.

அனுபவம்!
அனுபவத்திற்கும், முதிர்ச்சிக்கும் வயதுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை அவனிடம் இருந்து தான் நான் கற்றுக்கொண்டேன். ஒரு ஆண் தான் கற்ற அனுபவங்களை வைத்து தான் உணர்வு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் முன்னேறி செல்கிறான். ஒரு முப்பது வயது ஆணுக்கு பதின் வயது ஆணுக்கான முதிர்ச்சி மட்டுமே இருக்கலாம்.

ஒரு இருபது வயது ஆணுக்கு முப்பது வயது ஆணுக்கான முதிர்ச்சி இருக்கலாம். இதற்கு சிறந்த உதாரணம் என் காதலன். எங்களுக்குள் ஈகோ பிரச்சனை வந்ததே இல்லை. அது எங்கள் உறவை பாதித்ததும் இல்லை. எனக்கு ஏதேனும் அறிவுரை வேண்டும் என்றால் அவனிடம் தயங்காமல் கேட்பேன்.

இது தான் எங்கள் வாழ்க்கை குறித்து ஒரு பொதுவான கண்ணோட்டம் மற்றும் பிம்பத்தை உருவாக்கியுள்ளது.

பணம்!
நான் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். நான் அவனை காட்டிலும் அதிகமாக தான் சம்பாதிக்கிறேன். ஆனால், ஆரம்பத்தில் மட்டுமே இது எங்கள் உறவில் ஒரு சிக்கலாக இருந்தது. பின்னாட்களில் நாங்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டோம். ஹோட்டல் சென்றால், பெண்களுக்கான செலவு என அனைத்தும் ஆண்கள் தான் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை என்பதை உணர்ந்தோம்.

இன்று எங்கள் செலவுகள், பரிசுகள் என அனைத்திற்குமான செலவுகளை பகிர்ந்தே செய்கிறோம். நாங்கள் ஒருவரின் இலட்சியத்தை ஒருவர் அடைய ஊக்குவிக்கிறோம். எங்களுக்குள் என்தோவொரு சஞ்சலமும் இல்லை.

ஆதரவு!
மற்றவர்களை போலவே நாங்களும் எங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து நிறைய கனவுகள் கொண்டிருக்கிறோம். திருமண நாளில் இருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும், செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்க்க வேண்டும் என்பது வரை நிறைய திட்டங்கள் உண்டு.

எங்கள் இரு குடும்பங்களும் எங்கள் உண்மையான காதலை ஏற்றுக் கொண்டனர். எங்கள் உறவை அவர்கள் மதிக்கிறார்கள். எங்கள் உணர்வை அவர்கள் புரிந்துக் கொண்டுள்ளனர். நாங்கள் ஒரு சரியான பாதையில் பயணித்து வருகிறோம் என்பதை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.