Home உறவு-காதல் திருமணமான பின் கணவன் மனைவியை கைவிடுவதற்கான முக்கிய காரணங்கள்

திருமணமான பின் கணவன் மனைவியை கைவிடுவதற்கான முக்கிய காரணங்கள்

36

பொதுவாக ஆண்கள் சில அற்ப காரணங்களுக்காக பெண்களை கைவிடுவார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் பெண்களுக்கு வாழ்க்கையை வழி நடத்த, அவர்கள் தனித்து போராட வேண்டியிருக்கும். ஆண்கள் பெண்களை கைவிட பல காரணங்கள் உள்ளன.

பெண்களின் மேல் ஈடுபாடு குறைதல், வேறு ஒரு பெண்ணின் மீது ஈடுபாடு அல்லது மீண்டும் காதலில் விழுதல் என சில உதாரணங்கள். அடக்கியாளுகின்ற பெண்கள், ஆண்களை கட்டுப்பாட்டில் வைக்க விரும்பும் பெண்கள் இந்த நிலைக்கு ஆளாவது உண்டு.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பெண்களையும் ஆண்கள் கைவிட வாய்ப்புகள் அதிகம். பெண்கள் ஆண்களை புரிந்து கொள்ளாமல் அவர்களை அடக்கி ஆள முயற்சி செய்யும் போது திருமண பந்தம் உடைகிறது. இப்படிப்பட்ட உறவுகளில் கணவன் மனைவிக்கிடையே காதல் என்னும் உணர்வு கண்டிப்பாக இருக்காது.

இப்படி இந்த உறவு தோல்வியடைவதால், ஒரு ஆண் இன்னொரு பெண்ணை தேடி போகும் சூழல் ஏற்படுகிறது. தங்களுக்கு திருமணம் ஆன போதும் கூட இன்னொரு பெண்களை தேடும் சுபாவம் உடையவர்கள் ஆண்கள்.

• பெண் தன் கணவனை இழக்க, அவளின் பொறாமை குணம் கூட காரணமாக அமையலாம். தன் கணவன் மேல் அடிக்கடி சந்தேக்கப்படுவது கணவரை எரிச்சல் அடைய செய்து உறவையே முறியடிக்கச் செய்யும்.

• ஆண்கள் தன் உணர்வையும், கருத்தையும் புரிந்து கொள்ளாத மனைவியை கை விட்டு, தன்னை நன்கு புரிந்து தன் உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் பெண்ணை நாடிச் செல்வர். தன் மீது மனதார நம்பிக்கை வைக்கும் ஒரு பெண்ணை தான் ஆண்கள் எப்பொழுதும் விரும்புவார்கள்

• ஒரு ஆண் சிறு வயது பெண்ணையோ அல்லது கவர்ச்சிகரமான பெண்ணை பார்த்தாலோ மனதை பறி கொடுக்கும் நிலைமை வரலாம். மற்றொரு பெண்ணோடு புது உறவை வளர்க்க காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படிபட்ட தருணத்தில் எந்த ஒரு ஐய உணர்வும் இல்லாமல் தன் மனைவியையோ அல்லது காதலியையோ அவர்கள் கைவிட கூடும்.

• அடக்கியாளுகின்ற பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது. மனைவி எப்பொழுதும் தன்னை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ஆண்கள் விரும்ப மாட்டார்கள். இத்தகைய காரணத்தாலும் பெண்களை கை விடுகின்றனர்.