ஏற்கனவே திருமணம் ஆன பிரபுதேவாவை நடிகை நயன்தாரா காதலிக்கிறார் என்ற செய்தி மீடியாக்களிலும், தமிழ் சினிமா உலகிலும் தற்போது பரபரத்துக் கொண்டிருக்க, கள்ளக்காதல், காணாமல் போகும் காதலர்கள் என்று பல்வேறு வகை காதல்கள் இந்த சமுதாயத்தை மிரட்டிக் கொண்டிருக்கின்றன.
அன்று, மாடத்தில் வீற்றிருந்த சீதையை நோக்கி ராமன் வசப்பட்டதும் காதல்தான்; இன்று இளசுகள் கூடும் இடங்களில் நின்று ‘சைட்’ அடித்து ‘கரெக்ட்’ ஆவதும் காதல்தான் என்று சொல்லும்போது, உண்மையான காதல் எது என்ற கேள்வி இப்போது வலுக் கட்டாயமாக எழுந்துள்ளது.
காதலில் தோற்ற தேவதாஸ், காதலை கல்ல றையில் முடித்துக்கொண்ட லைலா-மஜ்னு, காதல் மனைவிக்காக உலக அதிசயத்தையே எழுப்பிய ஷாஜஹான்… என்று காதலால் பிர பலமானவர்கள் பலர் உள்ளனர்.
இவர்களை தலைமுறை தலைமுறையாக நினை வில் கொள்ளும் நாம், மனைவியை மட்டும் காதலியாய் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்.
“அன்பே
நீ வெளியில் வராதே;
வண்ணத்து பூச்சிகளெல்லாம்
நீ தான் மலரென்று
தேனெடுக்க
முற்றுகையிட்டுவிடும்” என்று, காதலிக்கும் போது காதலியிடம் ஐஸ் மேல் ஐஸ் வைத்த வர்கள்கூட, கடைசியில், ‘அப்படியா நான் சொன்னேன்?’ என்று அரசியல்வாதிகள் ஸ்டை லில் பல்டி அடிப்பதையும் நடைமுறை வாழ்வில் பார்க்க முடிகிறது.
அடிக்கடி மெரீனா பீச்சுக்கு விசிட் அடிக்கும் ராமையா அன்றும் அப்படியே அங்கு சென்றிருந்தார். அது மாலைநேரம் என்பதால் குளுமையை அள்ளிக்கொண்டு வந்து வீசிச்சென்றது கடல்காற்று. அந்த இனிமையில் அப்படியே காலாற நடந்து சென்றார்.
ஓரிடத்தில், கரையோரம் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சிறிது நேரம் அமர்ந் திருக்கலாம் என்று நினைத்தவர் அதை நோக்கி நடந்தார்.
படகை நெருங்க நெருங்க இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.
“உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். நம்மைக் கண்டு ஓடிப்போகும் அந்த சூரியனைக் கூட உனக்கு பிடித்து தருவேன். ஏன்… இன்னும் சிறிதுநேரத்தில் நம்மை காண வர இருக்கும் நிலவைக்கூட பிடித்து உனக்கே உனக்காய் பரிசளிப்பேன்” என்று காதல் வசனம் பேசிக்கொண்டிருந்தான் அந்த காதலன்.
அதற்கு காதலி சொன்னாள்…
“எனக்கு அதெல்லாம் வேண்டாம். நீ உன் மனைவியை டைவர்ஸ் செய்தால் போதும்” என்றாள்.
‘காதல் என்கிற போர்வையில் இப்படி கலாச்சாரத்தை சீரழிக்கிறார்களே’ என்று கோபம் கொண்ட ராமையா, அவர்களை லெப்ட் ரைட் வாங்க நெருங்கினார்.
அவர்களை பார்த்த அடுத்த நொடியே அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார். அங்கிருந்த பெண் வேறு யாருமல்ல; ராமையாவின் மனைவிதான்!
சென்னை போன்ற நகரங்களில் இப்படி ஓப்பனாகவே நடமாடும் கள்ளக்காதலர்கள், பல இடங்களில் ரகசியமாக சந்தித்துக்கொள்கிறார்கள் என்கிறார்கள் போலீசார்.
இப்படிப்பட்ட கள்ளக்காதல் அதிகரிக்க காரணம் என்ன? அன்பு கிடைப்பதில் ஏற்பட்ட பற்றாக்குறைதான்!
பீச்சுக்கு அடிக்கடி காற்று வாங்க வந்த ராமையாவுக்கு, கூடவே மனைவியையும் அழைத்து வந்து மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று தோன்றவில்லை. அதனால்தான், அவர் மனைவி இன்னொரு துணையை தேடிவிட்டாள்.
பணம், பணம் என்று பணத்தை மாத்திரமே தேடும் இன்றைய சமுதாயம், அன்புதான் பெரிய பொக்கிஷம் என்பதை மறந்தே போய்விட்டது.
ஒருவர் சாமியாரை பார்க்கச் சென்றார்.
“சுவாமி! திருமணம் ஆன புதிதில் கலகலப்பாக, அன்பாக என்னிடம் பேசிய என் மனைவி இப்போது என்னை கண்டாலே எரிந்து விழுகிறாள். நான் என்ன செய்வது?” என்று கேட்டார்.
“தினமும் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு மனைவியிடம் கொடு. மீண்டும் கல கலப்பாக பேசுவாள் உன் மனைவி” என்றார் சாமி யார்.
கேள்வி கேட்டவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
`மனைவி எரிந்து விழு வது ஏன் என்று கேட் டால், முதலிரவுக்கு செல் லும் வழிமுறையை கூறு கிறாரே இந்த சாமியார்; ஒருவேளை போலிச் சாமியாராக இருப் பாரோ?’ என்று கூட சந்தேகித்தார்.
தனது சந்தேகத்தை சாமியாரிடம் வெளிப்படுத்தாமல் வெளியேறினார். செல்லும் வழியில் பூக்கடையை அவர் பார்த்துவிட, ‘இன்று ஒருநாள் தான் சாமியார் சொன்னபடி செய்து பார்ப்போமே’ என்று ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனார், வீட்டுக்கு!
வீட்டு வாசலில் காலை வைக்கவே அவருக்கு பயமாக இருந்தது. எப்போதும் எரிந்து விழுபவள், இன்னிக்கு கொஞ்சம் அதிகமாக எரிந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தார்.
இருந்தாலும் மனதை ஒருவழியாக தேற்றிக்கொண்டு வீட்டுக்குள் சென்றார்.
கணவனை மல்லிகைப்பூவுடன் பார்த்த அவரது மனைவியின் முகத்தில் திடீர் மகிழ்ச்சி, பரவசம்!
ஓடி வந்து மல்லிகைப்பூவை வாங்கியவள், “என்னங்க… இந்த பூவை நீங்களே என் தலையில் வைத்து விடுங்களேன்” என்று கொஞ்சினாள், சிணுங்கினாள்.
அவருக்கு நடப்பது கனவா? நனவா? என்ற சந்தேகமே வந்துவிட்டது. `சாமியார் கொடுத்த ஐடியா நல்லா ஒர்க்அவுட் ஆகுதே’ என்று தனக்குள் சிலிர்த்துக் கொண்டார்.
மறுநாளும் மல்லிகைப்பூவை வாங்கிச் சென்றார். அப்போதும் அவரை அன்பாக வர வேற்று உபசரித்தாள் மனைவி.
சிலநாட்கள் இப்படியே கழிந்தது.
ஒருநாள், தனக்கு மல்லிகைப்பூ ஐடியா கொடுத்த சாமியாரை பார்க்கச் சென்றார்.
“சுவாமி! நீங்க சொன்னபடியே மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனேன். வழக்கமாக, என்னை கண்டுகொள்ளாத என் மனைவி என்னை விழுந்து, விழுந்து கவனித்தாள், அன்பொழுக பேசினாள். எப்படி அவள் மாறினாள்?” என்று கேட்டார்.
“அன்பை ஒருவரிடம் இருந்து தானாக பெற்றுவிட முடியாது. நாமும் அன்பாக இருந்தால் தான் அடுத்தவர்களிடம் அதே அன்பை பெற முடியும்” என்று கூறிய சாமியார், “ஆமாம்… நான் சொல்வதற்கு முன்பு கடைசியாக எப்போது உன் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங் கிக்கொண்டு போனாய்?” என்று கேட்டார்.
சிறிதுநேரம் யோசித்தவர், “எப்படியும் ஏழு எட்டு மாதம் இருக்கும்” என்றார்.
அதை சுட்டிக்காட்டிய சாமியார், “மனைவிக்கு தங்கம், வெள்ளி, பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்துதான் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது கிடையாது. அன்பாக ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்தாலே போதும். அன்புக்கு அவ்வளவு பவர் இருக்கிறது. இனியாவது மனைவியிடம் அன்பாக இரு. அவளும் உன்னிடம் அன்பாக இருப்பாள்” என்று வாழ்த்தி அனுப்பினார்.
நீங்களும் உங்கள் மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க வேண்டுமா?
அதற்கு சில டிப்ஸ் :
நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.
முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.
Love: What Life Is All About
எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரி யாமல்கடலை’ போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூட பலமணிநேரம் பேசு வார்கள். அதே போன்று நீங்களும் பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள் என்று அர்த்தம் இல்லை. உங்கள் குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.
பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள்அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.
சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்த ஸ்வீட்டையும் வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களதுமனைவி அடை யும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.
உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்றுநடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.
உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்’ என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.
மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலேபொழியும்.
மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காத லனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்!
அதனால் காதலியுங்கள், மனைவியை!