Home ஆண்கள் ஆண்கள் உறவின் பின் ஆணுறுப்பை சுத்தம் செய்யும் முறை

ஆண்கள் உறவின் பின் ஆணுறுப்பை சுத்தம் செய்யும் முறை

652

ஆண்களின் அந்தரங்கம்:ஆண், பெண் இருவருக்குமே இந்தரங்கப் பகுதிகளில் சுகாதாரமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால், பூஞ்சைத் தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அது இயல்பு தான் என்றாலும் அதனால் சில நோய்த் தொற்றுக்கள் எளிதில் பரவ ஆரம்பித்துவிடும். இது தேவையற்ற பிரச்சினைகளைக் கொடுக்கும்.

ஈஸ்ட் தொற்று ஈஸ்ட் தொற்றின் காரணமாக அந்தரங்க உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சினை உண்டாகும் என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு மிக அதிக அளவில் ஏற்படும் இந்த ஈஸ்ட் தொற்று பெண்ணுறுப்பில் அரிப்பு, அழற்சி போன்ற பல்வேறு பிரச்னைகளை உண்டாகின்றன. அதேபோல் தான் ஆண்களுக்கும் ஆணுறுப்புகளில் பூஞ்சை தொற்று ஏற்படும். அதனால் எப்போதும் ஈரப்பதமின்றி, சுகாதாரமாக வைத்துக் கொள்வது நல்லது.

காரணங்கள் அந்தரங்கப் பகுதிகளில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. பொதுவாக உடலை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளும் அளவுக்கு அந்தரங்கப் பகுதிகளைச் சுத்தம் செய்வது பற்றி யோசிப்பதே இல்லை. கழிவுகள் வெளியேறிய பின்னர் மட்டும் அந்த பகுதியை சுத்தம் செய்கிறோம். அதற்கு அடுத்து அங்கே நமக்கு வேலை இல்லை என்று நினைக்கிறோம். அதுதான் முற்றிலும் தவறான ஒரு பழக்கம். சுகாதாரம் குறைவான விஷயங்களால் ரத்த சர்க்கரை இருப்பவர்களுக்கும் பாலியல் உறவு மேற்கொள்பவர்க்கும் இந்த தொற்றுக்கள் வேகமாகப் பரவ ஆரம்பிக்கும். இந்த பூஞ்சைத் தொற்றுக்களை அப்படியே சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. இதற்கான சுகாதார முறைகளையும் சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்யது அவசியமான ஒன்று.

மருத்துவ ஆலோசனை அந்தரங்கப் பகுதிகளில் உண்டாகும் ஈஸ்ட் தொற்றுக்குக் கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஈஸ்ட் தொற்று மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களை தானே சரி செய்கிறேன் என்று தேவையில்லாமல் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. முதலில் ஒரு நல்ல மருத்துவரை அணுகி, என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை மறைக்காமல் தெளிவாகக் கூறி ஆலோசனை பெற்று, அவர்கள் கூறும் சிகிச்சையும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

உடலுறவு பிறப்பு உறுப்புகளின் வழி மற்றவருக்கு எளிதில் தொற்றுக்கள் பரவ வாய்ப்புண்டு. அதனால் நிறைய பிரச்னைகளும் பாலியல் நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆகையால் உங்கள் துணையுடன் முன் விளையாட்டு, நெருக்கமாக இருப்பதெல்லாம் ஓகே தான். ஆனால் பூஞ்சைத் தொற்றுக்கள் இருந்தால் உங்களிடம் முழுமையாக குணமடையும் வரை உடலுறவில் மட்டும் ஈடுபடுவதை தவிர்த்து விடுவது இருவருக்குமே நல்லது..

காண்டம் பாலியல் ஆசை அதிகமாக இருக்கிறது. என்னால் கட்டுப்பாடோடு இருக்க முடியவில்லை என்று நீங்கள் நினைத்தால், உடலுறவு கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ஆணுறையைப் பயன்படுத்துங்கள். பாதுகாப்பான உடலுறவின் மூலமாக நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும். அதேபோல் பெண்ணும் பெண்களுக்கான காண்டமைப் பயன்படுத்திக் கொள்வது மேலும் கூடுதல் பாதுகாப்பைத் தரும்.

சுத்தம் செய்தல் பெரும்பாலானவர்களுக்கு சுய இன்பம் பழக்கம் கட்டாயம் வாழ்நாளில் ஒரு முறையாவது இருந்திருக்கும். அப்படி செய்வது போலவே நினைத்துக் கொண்டு, கைகளில் ஆணுறுப்பை பிடித்து, மேல் உள்ள தோலை முன்னும் பின்னாக மிக மென்மையாக நகர்த்தி இரண்டு மூன்று முறை செய்து, உள்ளே தேங்கியிருக்கும் கழிவுகள், அழுக்குகளை மேல்நோக்கி கொண்டு வர வேண்டும். பிறகு மென்மையான சோப்பு நீர் அல்லது ஷாம்பு கொண்டு ஆணுறுப்பு, விதைப்பை என முழுமையாக நன்கு சுத்தம் செய்யுங்கள். அதன்பின் மென்மையான துணி கொண்டு முழு உறுப்புப் பகுதியையும் விதைப்பை, அதன் இடுக்குகள் என அத்தனையையும் நன்கு ஈரமில்லாமல் துடைக்க வேண்டும். சோப்புக்கு பதிலாக, தற்போது அந்தரங்கப் பகுதிகளைச் சுத்தம் செய்வதற்காகவே சில லிக்விடுகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் இன்னும் நல்லது.

பலபேர் உறவு பலருடன் உறவு கொள்பவராக இருந்தால் கட்டாயம் அதை தவிர்க்க வேண்டும். இதுமாதிரியான சமயங்களில் மிக வேகமாக பூஞ்சை தொற்று பரவ ஆரம்பிக்கும்.