விவாகரத்தால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக சமுதாயம் கூறினால் பாதிப்பு என்னவோ இருவருக்கும் தான். ஆனால் ஆண்களும், இந்த சமுதாயமும் விவாகரத்தான ஆண்களை விட்டு விடும். எல்லாவற்றிற்கும் பெண்கள் தான் காரணம் என்பது போல் பேசி அவர்களை மனம் உடைய செய்து விடுவார்கள்.
பெண்கள் இதை பற்றி எல்லாம் கவலை கொள்லாமல் தங்களுடை எதிர்காலத்தில் மட்டும் மனதில் நினைத்து முன்னேற வேண்டும்.
விவாகரத்தான பெண்கள் முதலில் குடும்ப உறவுகளை மேம்படுத்தவேண்டும். குடும்ப உறவுகள் மேம்பாடு அடையும்போது ஓரளவு மகிழ்ச்சி நிரந்தரமாகும். அதன் பின்பு அவர்கள் சமூக உறவை மேம்படுத்த வேண்டும்.
சமூக உறவை நீங்கள்தான் வளர்க்கவேண்டும். அதற்கு ஆரோக்கியமான சிந்தனையும், மகிழ்ச்சியும், புன்னகையும், தைரியமும் அவசியம்.
உங்களுடைய பழைய சோக கதைகளை கேட்க யாருமே விரும்ப மாட்டார்கள். உங்களை சுற்றியிருக்கும் சமூகத்துக்கு உங்களால் முடிந்த நன்மைகளை செய்து அவர்களை அனுசரித்து நடந்தால் அது ஒரு நல்ல சூழலை உங்களுக்கு ஏற்படுத்தி தரும். அதன் மூலம் உங்கள் மனதில் இருக்கும் வெறுமை அகலும்.
விவாகரத்தான பெண்கள் அடுத்தவர்களை குறைசொல்வதை தவிர்க்கவேண்டும். ஏன்என்றால் முதலில் கணவரை குறைகூறிதான் விவாகரத்து பெற்றிருப்பார்கள். அப்படிப்பட்ட பெண்கள் குடும்பத்தினர் மீதும், சமூகத்தின் மீதும் குறை சொல்லும்போது அது சரியாகவே இருந்தாலும் ‘இந்த பெண்ணுக்கு வேறு வேலையே இல்லை. யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பதுதான் இவள் வேலை’ என்று காதுபடவே குற்றஞ்சாட்டுவார்கள். அதனால் அடுத்தவர்களை குறைசொல்லாமல் அனுசரித்து வாழ, விவாகரத்தான பெண்கள் முன்வரவேண்டும்.