அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை:
பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான முத்தங்களை வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.
தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர்
தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணம். செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.
முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.
ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின்போது பயன்படுத்த தேவையான சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார்களாம்.
ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால், அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.
முத்தம் விஷயத்தில் ஆண்கள் தேமேஸ என்று ஒரு புறம் இருக்கஸ இந்த முத்த இன்பத்தை அணுஅணுவாய் ரசிப்பதிலும் கொடுப்பதிலும் பெண்கள்தான் ஹடாப்.’
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர்எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம்.
தாம்பத்ய உறவின்போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்தமிடாமலேயே உறவை வெற்றிகரமாக முடித்துக் கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். அவர்கள், முத்தம் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்து உறவில் ஈடுபட்டால்கூட, அதை மறந்து தங்களை அறியாமல் துணைக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.
தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெறுகிறாளாம்.
இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெரிக்க ஆய்வு. ஆனால், நம் பெண்கள் எப்படி? அவர்களின் ஆழ்மனத்திற்கு மட்டுமே அது வெளிச்சம்.