Home பெண்கள் தாய்மை நலம் உங்களுக்கு அடிக்கடி கரு கலைகிறதா காரணம் என்ன?

உங்களுக்கு அடிக்கடி கரு கலைகிறதா காரணம் என்ன?

54

தாய் நலம்:செயற்கையாக கருக்கலைப்பு செய்யாமல் தானாகவே சிலருக்கு கரு கலைந்து விடுவதுண்டு. அதற்கான மருத்துவ காரணங்களை பார்க்கலாம்..

கருக்கலைப்பு என்பது செயற்கை. அதுவே இயற்கையாக நடக்குமேயானால்
அது கருச்சிதைவு. இந்த நிகழ்வு மருத்துவ முறைப்படி மிஸ்கேரேஜ்
எனப்படுகிறது.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், தானாகவே அழிந்துபோவது
அல்லது சிதைந்துபோதலைக் குறிக்கிறது. இது பொதுவாகக் கருத்தரிப்பின்
ஆரம்ப காலத்தில், இந்த பிரச்னை கருத்தரித்த 20 வாரங்களில்
தன்னிச்சையாக நிகழும் ஒரு சிக்கலான நிலையாக பார்க்கப்படுகிறது.

இந்த அபாயம் ஏற்பட சில காரணங்கள் உள்ளன. அவற்றை பின்வருமாறு
பார்க்கலாம்..

40 வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பது.

ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருப்பது.

சர்க்கரை நோய், தைராய்டு கோளாறுகள்.

உடல் ஹார்மோன்களில் கோளாறுகள்.

தாய்க்கு புகை, மது போன்ற பழக்கங்கள் இருப்பது.

கருப்பையின் அமைப்பு சரியாக இல்லாமல் இருப்பது மற்றும் கருப்பை

பலவீனமாக இருப்பது

நோய் எதிர்ப்பு சக்தியின்மை, எதிர்பாராத விபத்துகள் நடப்பது.

கருச்சிதைவுக்கான அறிகுறிகள்..

இரத்தப்போக்கு, முதுகுத் தண்டின் அடிபாகத்தில் வலி உள்ளிட்டவை ஏற்படும்.
வைட்டமின் பி சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிகம்
உட்கொள்வதன் மூலம் இவ்வித குறைபாடுகளை ஓரளவு சரிசெய்ய முடியும்
என்கின்றனர் மருத்துவர்கள்.