Home பெண்கள் அழகு குறிப்பு பாத்ரூம்ல இந்த விடயத்தை செய்யாதீங்க!

பாத்ரூம்ல இந்த விடயத்தை செய்யாதீங்க!

22

உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் பாத்ரூம்களில் நாம் சில விடயங்களை செய்தால் அது ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

அப்படி செய்யக்கூடாத விடயங்கள் என்னவென்று காண்போம்

டூத் பிரஷ்

பல் துலக்க உபயோகப்படுத்தும் டூத் பிரஷ்களை ஒருவருக்கு உடல் நல பிரச்சனை ஏற்ப்பட்டு அதிலிருந்து விடுபட்டவுடன் அதே பிரஷ்களை மீண்டும் உபயோகப்படுத்தக்கூடாது.
காரணம் அந்த நோய் கிருமி அந்த பிரஷில் தங்கி விடுகிறது.

ஷேவிங் பிளேடுகள்
ஷேவ் செய்த பின்னர் பலர் தாங்கள் உபயோகப்படுத்திய பிளேடுகள் வாஷ்பேசினிலே போட்டு விடுவார்கள். இப்படி செய்வதால் அது துருபிடித்து மறுமுறை உபயோகப்படுத்தினால் கேடு விளைவிக்கும்.

டாய்லெட்
சுத்தமே செய்யாமல் அழுக்கு படிந்த டாய்லெட்களை உபயோகித்துவதால் கிருமி உருவாகி உடல் நலத்தை கெடுக்கும். சுத்தமே சுகாதாரம் என்பது போல டாய்லெட்களை குறைந்த இடைவெளியில் கழுவ வேண்டும்.

துண்டு
குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் கைகழுவி விட்டு ஒரே துண்டில் துடைப்பதை பல வீடுகளில் காண முடியும். இதனால் ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது.

சோப் கிண்ணம்
உடலுக்கு தேய்க்கும் சோப்புகளை பொதுவாக கிண்ணத்தில் வைப்போம். அந்த கிண்ண டப்பாவை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் கிருமிகள் மூலம் தோல் சம்மந்தமான பிரச்சனை வரலாம்.

உபயோகப்படுத்திய துணிகள்
ஏற்கனேவே பாத்ரூமில் உடலை துடைத்து கொண்ட டவல் மற்றும் துணிகளை அப்படியே அங்கு காயப் போடக்கூடாது. அதை உடனே துவைத்து விடுதல் நலம் தரும்.