ஒவ்வொரு ஆணும் மிகவும் முக்கியமான உறுப்பான ஆணுப்பை கவனமாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஓர் ஆண் தன் உடல்நலத்தில் கவனக் குறைவுடன் இருந்தால், அதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, பாலியல் ஆரோக்கியமும் தான் பாதிக்கப்படும். எனவே ஆண்கள் தங்களது உடல்நலத்திற்கு முன்னுரிமை வழங்கக வேண்டும்.
1
இதய நோய்
ஒரு ஆணுக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டால், அந்த ஆணின் ஆணுறுப்பு பலவீனமாகும். எப்படியெனில் இதயத்திற்கே போதிய இரத்தம் செல்லாமல் அங்கேயே பிரச்சனை இருந்தால், ஆணுப்பிற்கு எப்படி இரத்த ஓட்டம் கிடைக்கும்.
2
இதய நோய்
ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால், பலவீனமாகி விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் பாலியல் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க விரும்பினால், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
3
சர்க்கரை நோய்
ஆம், நீரிழிவிற்கும், பாலியல் பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் உள்ளது. அதிலும் இந்தியாவில் தான் சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால், அதனைத் தொடர்ந்து பல பிரச்சனைகள் உடலில் வரும்.
4
சர்க்கரை நோய்
அதில் சர்க்கரை நோய் உள்ள ஆண்களை எடுத்துக் கொண்டால், முதலில் அவர்களது ஆணுறுப்பிற்கு செல்ல வேண்டிய இரத்த அளவு குறைந்து, விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படும். குறிப்பாக டைப் 2 நீரிழிவு இருந்தால், இப்பிரச்சனையை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
5
மன அழுத்தம்
மனக் கஷ்டம் தானே என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். மன ஆரோக்கியமும், பாலியல் ஆரோக்கியமும் நெருங்கிய தொடர்பு கொண்டது. இதில் அடிக்கடி மன இறுக்கத்திற்கு உள்ளாகும் ஆண்கள் பாலியல் பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள்.
6
மன அழுத்தம்
ஆய்வு ஒன்றிலும், மன அழுத்தத்துடன் இருக்கும் ஆண்களுக்கு அதிகாலையில் ஏற்படும் விறைப்பு பாதிக்கப்படுவதோடு, அவர்களது ஆண்குறி சற்று வளைந்தும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவே ஆண்களே மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள முயற்சியுங்கள்.
7
நரம்பு சார்ந்த சிக்கல்கள்
பக்கவாதம், கழுத்து அல்லது முதுகுப் பகுதியில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், அதனாலும் ஆணுறுப்பு மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும். அதில் முக்கியமாக ஆணுப்பிற்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, ஆணுறுப்பின் சாதாரண இயக்கமும் பாதிக்கப்படும்.
8
வயது
இது ஓர் பிரச்சனை அல்ல. அதேப்போல் இதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும், உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க ஆணுறுப்பின் செயல்பாடும் குறைய ஆரம்பிக்கும். மேலும் சில பிரச்சனைகளான புரோஸ்டேட் வீக்கம், விறைப்புத்தன்மை குறைபாடு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.