Home ஆண்கள் ஆணுறுப்பில் அதீத எரிச்சல் மற்றும் கூச்சம்

ஆணுறுப்பில் அதீத எரிச்சல் மற்றும் கூச்சம்

336

ஆணுறுப்பில் அதீத எரிச்சல் மற்றும் கூச்சம் என்பது என்ன? (What is male genital dysaesthesia?)

இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆணுறுப்பில் எரிச்சல், எரிவது போன்ற உணர்வு, அசௌகரியம் அல்லது தொடும்போது அதீத கூச்சம் இருக்கும். இந்த உணர்வு ஆணுறுப்பு, விதைகள் அல்லது முன் தோல் ஆகிய பகுதிகளில் இருக்கும்.

ஆணுறுப்பில் அதீத எரிச்சல் மற்றும் கூச்சம் என்பதை பின்வரும் பெயர்களிலும் குறிப்பிடுகின்றனர்:

விதைப்பை எரிச்சல் நோய்க்குறித் தொகுப்பு என்றும் குறிப்பிடுவர்
இதனுடன் தோல் சிவத்தலும் இருந்தால், சிவப்பு விதை நோய்க்குறித்தொகுப்பு என்றும் குறிப்பிடுவர்

ஆணுறுப்பின் அதீத எரிச்சல் கூச்சம் ஏற்படுவதற்கான காரணங்கள் (What causes male genital dysaesthesia?):

பெரும்பாலும், இதற்கான காரணம் என்ன என்பது துல்லியமாகத் தெரியாது. பின்வருபவை சாத்தியமுள்ள காரணங்களாக இருக்கலாம்:

நரம்புகள் அழுத்தப்படுதல் (எ. கா. இனப்பெருக்க உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தொகுதி சிக்கிக்கொள்ளுதல்
நரம்புகள் அதீதமாகச் செயல்படுவதால் கூச்சம் ஏற்படலாம்
விதைப்பை மீது கார்டிகோஸ்டிராய்டு ஆயின்மென்ட்டுகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் தோல் சிவக்கலாம்.
மரபியல் காரணிகள்
முதுகுத்தண்டில் ஏற்படும் காயங்கள்
இதன் அறிகுறிகள் என்ன? (What are its symptoms?)

இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் பின்வரும் உணர்வுகள் தோன்றலாம்:

கடுமையான நமைச்சல்
எரிச்சல்
ஹைப்பரால்கேசியா (அதீத வலியுணர்வு)
விதைப்பை எப்போதும் சிவந்து இருப்பது
ஆணுறுப்பில் அதீத எரிச்சல் மற்றும் கூச்சம் எப்படி உறுதிப்படுத்தப்படுகிறது? (How is male genital dysaesthesia diagnosed?)

இதனை உறுதிப்படுத்த தனிப்பட்ட பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை, சாதாரணமாகத் தெரிகின்ற அம்சங்களைக் கண்டே உங்கள் மருத்துவர் இதனை உறுதிப்படுத்த முடியும். சில சமயம், கார்டிகோஸ்டிராய்டுகள் போன்ற ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற பொருள்களால் இது உண்டாகியிருக்குமா எனக் கண்டறிவதற்காக பேட்ச் சோதனை செய்யப்படலாம்.

இதற்கு என்ன சிகிச்சையளிக்கப்படுகிறது? (How is male genital dysaesthesia treated?)

ஆன்டிபயாட்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளுடன் சேர்த்து டாக்சிசைக்கிளின் மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். நரம்பின் எரிச்சலைக் குறைப்பதற்கான மருந்துகளும் குறைவான மருந்தளவில் கொடுக்கப்படலாம். உடலில் மேலே பூசும் மருந்துகள் ஏதேனும் நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தால், அதை நிறுத்துமாறு உங்கள் மருத்துவர் அறிவுறுத்துவார்.

வலியையும் அதீத கூச்சத்தையும் சமாளிக்க சில வழிமுறைகள்:

சோப்பு இல்லாத க்ளென்சர்களைப் (சுத்தப்படுத்திகள்) பயன்படுத்தவும்
இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளில், சென்ட், டாய்லைட்டரி போன்ற எதையும் பயன்படுத்த வேண்டாம்
தோல் படைக்குப் பரிந்துரைக்கப்பட்ட கார்டிகோஸ்டிராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்தவும்
அழற்சியை தற்காலிகமாகத் தணிக்க, குளிர் ஒற்றடம் கொடுக்கலாம்
தளர்வான உள்ளாடைகளைப் பயன்படுத்தவும்
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

உங்களுக்கு இந்தப் பிரச்சனை இருப்பது உறுதியானால், உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சை முறையைப் பின்பற்றவும். அடுத்தடுத்து மருத்துவர் பரிந்துரைத்த நேரங்களில் மருத்துவரிடம் சென்று வரவும்.