Home ஆண்கள் ஆணுறுப்பு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே போகிறது

ஆணுறுப்பு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே போகிறது

204

ஆணுறுப்பு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே போகிறது இப்படியே போனால் எங்கே எனது உறுப்பு காணாமல் போய்விடுமோ எனவும் பரிசோதனை செய்து பார்த்த போது ஒரு பிரச்னையும் தென்படவில்லை.

உறுப்பு திடீரென காணாமல் போக வாய்ப்பே இல்லை என அவனுக்கு தைரியம் சொன்னேன். இது மனரீதியான பயம்தான் என்று விளக்கினேன். பல ஆண்களுக்கு தங்கள் உறுப்பு நாளுக்கு நாள் சிறுத்து வருகிறதோ என்ற பயம் இருக்கிறது.மலாய் மொழியில் Koro என்றால் ஆமை என்று பொருள். ஆமைக்கு ஏதாவது ஆபத்து வந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். வெறும் ஓடு மட்டும்தான் வெளியில் தெரியும். அது போல ஆண் குறியானது உள்ளே போய்விடுமோ என்ற பயம் இந்தப் பிரச்னையில் வருவதால் இதை Koro syndrome என அழைக்கிறார்கள்.

Penis Panic Syndrome என இன்னொரு பெயரும் உண்டு. சீனாவில் இதே பயத்தை Suo-yang என்று சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாமல் போவது இதன் அர்த்தம். ஆண் குறியானது கண்ணுக்குத் தெரியாமல் போய் இறந்துவிடுவோம் என நினைப்பார்களாம். பெண்களுக்கும் இந்த வகையான பயம் உண்டு. அவர்களுக்கு மார்பகங்கள் சுருங்கி உள்ளே போய்விடுமோ, யோனியின் உதடுகள் மூடி உள்ளிழுத்து விடுமோ என்றெல்லாம் பயம் ஏற்படுமாம்.

ஆணுறுப்பு

சிலர் பில்லி, சூன்யத்தால் இப்படி ஆகிவிட்டதோ என்று கூட நினைப்பார்கள். இன்னும் சிலர் சுய இன்பத்தால் ஆண்குறி சிறுத்துக் கொண்டே போகிறதோ என பயப்படுவார்கள். இந்த பயங்களுக்கெல்லாம் பணத்துக்காக பொய்யை பரப்பும் போலி மருத்துவர்கள்தான் காரணம். இந்த வகை பயம் இப்போது மட்டும் அல்ல… பண்டைய காலத்திலேயே இருந்திருக்கிறது. The Yellow Emperors classic of Internal medicine என்ற புத்தகம் சீனாவில் எழுதப்பட்டிருக்கிறது.

அதில் ஒரு ஊரே இந்த பயத்தில் இருந்திருப்பது பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது. ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இந்த பயம் பிடித்து ஆட்டியிருக்கிறது. 1967ல் சிங்கப்பூரில் இந்த பயம் பெரும் கலவரத்தையே உண்டாக்கி இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால், ஒவ்வொருவரும் தனது ஆண் குறியை கயிறில் கட்டிக் கொண்டு கையில் பிடித்த படி மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். வதந்தி போல அண்டை நாடுகளுக்கு இந்த விஷயம் பரவியிருக்கிறது.

இந்த விஷயத்தில் பயம் என்பதே தேவையற்றது. பொதுவாக வயிறு பெரிதாக உள்ளவர்களுக்கு தமது குறியை பார்க்க முடியாது. ஹைட்ரோசில் என்ற விதைப்பை வீக்கம் உள்ளவர்களுக்கும் குறி கண்ணுக்குத் தெரியாது. உடலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும் தனது ஆண் குறியை பார்ப்பது கஷ்டமாக இருக்கும்.ஆணுறுப்பை பற்றி சில உண்மைகளை அறிந்து கொண்டால் இந்தப் பிரச்னை ஏற்படாது. ஆண்களுக்கு வயது வந்த பிறகு அதாவது, 18 முதல் 20 வயது வரை இருக்கும் ஆணுறுப்பின் அளவானது ஒரு போதும் சிறியதாக மாறாது. ஆண் ஜனன உறுப்பில் எலும்பு கிடையாது.

ஸ்பாஞ்ச் டிஸ்யூக்கள் மட்டுமே இருக்கின்றன. அதனால் சூழ்நிலையைப் பொறுத்து சுருங்கி விரிந்துகொள்ளும். முக்கியமாக ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் போது அளவு பெரிதாகிவிடும். மற்ற நேரங்களில் சிறியதாக சாதாரணமாக காணப்படும். முக்கியமாக மூன்று விஷயங்களுக்கு ஆணுறுப்பு பயன்படுகிறது.

சிறுநீர் வெளியேற, விந்து வெளியேற, செக்ஸில் ஈடுபட ஆகியவை இதன் பணிகள். அதனால், போலி மருத்துவர்கள் கிளப்பும் பயத்தை நம்பி ஏமாறாதீர்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அதனை முறையாக படித்த டாக்டரிடம் காட்டி நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். ஆணுறுப்பு சிறியதாக இருந்தாலும் ஒரு பிரச்னையும் இல்லை. தேவையற்ற பயத்தை நீக்கி, இருப்பதை வைத்து சந்தோஷமாக இருங்கள்!