Home ஆண்கள் உங்களுக்கு இந்த வைட்டமின்கள் குறைவால் ஆண்மை குறையும்

உங்களுக்கு இந்த வைட்டமின்கள் குறைவால் ஆண்மை குறையும்

131

ஆண்மை பெருக்கம்:ஆரோக்கியமான வாழ்விற்கு வைட்டமின்கள் மிகவும் அவசியமானவை. ஒவ்வொரு வைட்டமினும் ஒவ்வொரு நன்மையை வழங்கக்கூடியது. வைட்டமின்களை பொறுத்தவரையில் ஆண், பெண் என வேறுபாடுகள் இல்லை, அவை இருபாலினத்திற்குமே ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியது. ஆனால் குறிப்பிட்ட சில வைட்டமின்கள் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு அதிக நன்மையை வழங்கக்கூடும். அதில் ஒன்றுதான் வைட்டமின் ஈ.

உலகளவில் ஆண்களை அச்சுறுத்தும் ஒரு பிரச்சினை ஆண்மைக்குறைவு மற்றும் விந்தணுக்களின் குறைபாடு ஆகும். இதனை சரி செய்ய ஆண்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குறைபாடுகளை போக்க எளிய வழி வைட்டமின் ஈ-யை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதுதான். வைட்டமின் ஈ ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் அதிகரிக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வைட்டமின் ஈ வைட்டமின் ஈ ஆனது வைட்டமின் குழுக்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இது உடலின் என்சைமிக் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிதை மாற்றங்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாகவும் செயல்படுகிறது. வைட்டமின் ஈ பொதுவாக டோகோபெரோல்ஸ் மற்றும் டோகோட்ரினோல் என இரு வடிவங்களில் உள்ளது. ஆனால் நமக்கு உணவுகள் மூலம் கிடைப்பது ஆல்பா- டோகோபெரோல்ஸ் ஆகும். நமது உடல் இயல்பாக செயல்பட வைட்டமின் ஈ அவசியமாகும். அதில் குறைபாடு ஏற்படும்போது பல பக்கவிளைவுகள் ஏற்படும். குறிப்பாக வைட்டமின் ஈ குறைபாடு ஆண்களின் பாலியல் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல சீரான வைட்டமின் ஈ ஆண்களின் அனைத்து பாலியல் பிரச்சினைகளையும் குணப்படுத்தக்கூடும்.

நோயெதிர்ப்பு மண்டலம் உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையாலும், சீரற்ற வளர்ச்சிதை மாற்றத்தாலும் உங்கள் செல்கள் சிதைவடைவதை ஆன்டி ஆக்சிடண்ட்கள் தடுக்கிறது. வைட்டமின் ஈ ஆனது சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாக செயல்படுவதுடன் கொழுப்பை கரைக்கக்கூடிய சிறந்த வைட்டமினாகவும் உள்ளது. இதன் சிறந்த பலன்களில் ஒன்று உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதாகும். குறிப்பாக 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் வைட்டமின் ஈ அதிகம் எடுத்துக்கொள்வது அவர்கள் எளிதில் நோய்வாய்ப்படுவதை தடுக்கும். குறிப்பாக சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

இதய ஆரோக்கியம் கொழுப்பை கரைக்கக்கூடிய ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ள வைட்டமின் ஈ இதயத்தை சுற்றி கொழுப்புகள் அதிகரிப்பதை தடுப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் இரத்த குழாய்கள் மற்றும் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. இது உங்களுக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை பாதியாக குறைக்கிறது. மேலும் ஆய்வுகளின் படி உயர் அளவு வைட்டமின் ஈ கரோனரி இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

திசு சேதமடைவதை தடுக்கும் உடற்பயிற்சிகள் உங்களுக்கு நன்மையை வழங்கக்கூடியவை, ஆனால் அதன் விளைவாக உங்கள் உடலில் சில எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். அதீத உடற்பயிற்சி உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கும் மோசமான செயல் ஆகும், இதனால் திசுக்கள் சேதமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளது. வைட்டமின் ஈ ஆன்டி ஆக்சிடன்டானது இந்த திசு சிதைவை தடக்ககூடிய திறன் கொண்டதாகும்.

புரோஸ்ட்ரேட் புற்றுநோய் வைட்டமின் ஈ ஒரு பிரபலமான ஆகிசிஜனேற்றியாகும். எனவே இது உங்கள் உடலில் உள்ள நச்சு பொருட்கள் நாள்பட்ட நோய்களை உண்டாக்கும் முன் அவற்றை வெளியேற்றுவதன் மூலம் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கக்கூடும். வைட்டமின் ஈ உங்களுடைய சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது, ஆனால் புற்றுநோய் மீதான இதன் செயல்பாடு மேலும் சுவாரசியமானது. ஏனெனில் இது ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை தடுக்கக்கூடும். வைட்டமின் ஈ அதிகம் எடுத்துக்கொள்ளும் ஆண்களுக்கு புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 70 சதவீதத்திற்கு மேல் குறைவாகிறது.

விந்தணுக்களின் தரம் உங்கள் தினசரி உணவில் வைட்டமின் ஈ அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது உங்கள் உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 400 மிகி வைட்டமின் ஈ மற்றும் 225 மிகி ஒப்பி செலீனியம் இரண்டும் இணையும்போது அது உங்கள் உயிரணுக்களின் தரத்தை அதிகரித்து உங்களின் கருவுறுத்தும் தன்மையையும், கருமுட்டையை நோக்கி உயிரணுக்கள் செல்லும் வேகத்தையும் அதிகரிக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

விந்தணுக்களின் எண்ணிக்கை உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது உங்கள் கருவுறுத்தும் தன்மையை பாதிக்கும். குறைவான உயிரணுக்கள் என்னும் போது 1மிலி உயிரணுவில் 20 மில்லியன்க்கு குறைவாக உயிரணுக்கள் இருப்பதாகும். இது ஏற்பட வயது அதிகரிப்பு, எடை அதிகரிப்பு, தீய பழக்கங்கள் என பல காரணங்கள் இருக்கலாம். இதனை சரிசெய்ய மருந்துகள், ஹார்மோன் சிகிச்சைகள் என பல வழிகள் உள்ளது. ஆனால் இவற்றை விட எளிய வழி என்னவெனில் வைட்டமின் ஈ அதிகம் எடுத்துக்கொள்வதாகும். வைட்டமின் ஈ-யில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். திசுக்கள் சிதைவடைவதால் ஏற்படும் உயிரணுக்களின் குறைபாட்டை வைட்டமின் ஈ குணமாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆண்மை அதிகரிப்பு உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிப்பது மட்டுமின்றி உங்கள் உணவில் வைட்டமின் ஈ அதிகம் சேர்த்துக்கொள்வது உங்களின் பாலியல் செயல்திறனை அதிகரிக்கும். ஆய்வுகளின் படி வைட்டமின் ஈ உங்கள் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்க உதவும் என கூறப்படுகிறது. டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறையும்போது அது பாலியல் செயல்திறன் மட்டும் நாட்டத்தை குறைக்கிறது. எனவே வைட்டமின் ஈ அதிகரிக்கும்போது அது டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டை குணமாக்கும். வைட்டமின் ஈ அதிகரிக்கும்போது உங்களின் பாலியல் செயல்திறனும், உறவில் ஈடுபடும் நேரமும் அதிகரிக்கும்.