Home ஆண்கள் ஆண்மை பெருக உங்கள் ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் !

உங்கள் ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் !

26

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதில் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். ஆண்மைக்கான சுரப்பிகள் சுரப்பதால், இயற்கையாக ஆண்கள் வலிமையாகவும், பலமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், இல்லையேல் ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். காம இச்சை அதிகரிக்கும் இக் காலகட்டத்தில் அவர்கள் ஹாஸ்டலில் தங்கியிருப்பவராக இருந்தால், சில ஆண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு தமது விந்துவை வெளியேற்றும் செயல்களும் உள்ளது.

இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும். சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு.

பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு. இந்த நோயில் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும். புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவற்றைத் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது