Home ஜல்சா உலகிலேயே முதன்முதலில் குழந்தை பெற்றெடுத்த ஆண் இவர்தானாம்… அதுவும் மூணு குழந்தையாம்

உலகிலேயே முதன்முதலில் குழந்தை பெற்றெடுத்த ஆண் இவர்தானாம்… அதுவும் மூணு குழந்தையாம்

33

அமெரிக்காவில் உள்ள ஹவாயில் ஜனவரி 20, 1974 ஆம் ஆண்டு பிறந்தார். இளமைப் பருவத்தில் மாடலாக இருந்தார். ஹவாய் யு.எஸ் அழகிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை வந்தார். இவருடைய பெயர் தாமஸ் டிரேஸ் பீட்டி.

அதன்பிறகு பாடி பில்டிங்கில் கவனம் செலுத்திய இவர், பல போட்டிகளில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்.

இதன்பிறகு தான் இவருடைய உடலில் சில மாற்றங்கள் உண்டாகியிருக்கின்றன. இவருடைய 23 ஆம் வயதில் டெஸ்ட்ரோ ஸ்டிரோன் ஹார்மோன் ட்ரீட்மெண்ட் என்னும் சிகிச்சையை மேற்கொண்டு, ஆணாக மாறி வாழ ஆரம்பிதார்.

ஆணின் உடல் தோற்றத்தைப் பெற செக்ஸ் ரீ அசைன்மெண்ட் சர்ஜரி செய்து கொண்டார்.

குழந்தை வேண்டுமென்பதற்காக முழுதாக ஆணாக மாறவில்லை. அதனால் இவர்களுடைய கர்ப்பப்பை போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

2002 க்குப் பின், பர்த் சர்ஃபிகேட், லைசன்ஸ், பாஸ்போர்ட், லீகல் சுாசியல் செக்யூரிட்டி இன்டக்ஸ் ஆகிய அனைத்திலும் தன்னுடைய பாலினத்தை பெண் என்பதிலிருந்து ஆண் என்று மாற்றிக்கொண்டார்.

நான்சி கில்லஸ்பை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, சட்டப்பூர்வமாக தம்பதிகளாக வாழத் தொடங்கினர்.

இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள். மூன்றுமே தாமஸ் பீட்டி அதிகாரப்பூர்வமாக, ஆணாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஆர்ட்டிஃபீசியல் இன்சமினேசன் மூலம் அவரால் பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகள். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?