Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஆண்களுக்கு தொப்பை அதிகமாக இருப்பது ஏன்?

ஆண்களுக்கு தொப்பை அதிகமாக இருப்பது ஏன்?

23

பெண்களை விட ஆண்களுக்குத் தான் பெரும்பாலும் அதிகப்படியான தொப்பை ஏற்படுகிறது. அதற்கு என்ன காரணம் என நீங்கள் யோசித்தது உண்டா?
ஆண்களுக்கு பெண்களை விட அதிகமான தொப்பை ஏற்பட என்ன காரணம்?

பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபாலர்களுக்கும் அதிகப்படியான தொப்பை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது.

ஆண்கள் அதிகமாக பீர் குடிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ஆண்களின் சில பழக்க வழக்கங்கள் தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

பீரானது ஆரோக்கியமானதாக இருந்தாலும், கூட இதனை அடிக்கடி குடித்தால் தொப்பை அதிகமாக உண்டாகும். ஏனெனில் இதில் கலோரிகள் அதிகமாக நிறைந்துள்ளது.

ஆண்கள் நாற்காலியில் அதிக நேரம், உட்கார்ந்தவாறே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். இதனால் சாப்பிடும் சாப்பாடு சரியாக ஜீரணம் அடையாமல், அந்த உணவுகள் கொழுப்புக்களாக மாறி உடலில் தங்கி அதிகப்படியான உடல் பருமனை உருவாக்குகிறது.

ஆண்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், பல ஆண்கள் அதிகப்படியான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள். இதனால் அவர்களின் உடலில் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுகிறது.

ஆண்களின் இது போன்ற பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் காரணமாக பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக தொப்பை ஏற்படுகிறது.