Home ஆண்கள் ஆண்களே விந்தணுவில் பிரச்சனையா..? விந்து உற்பத்தியை அதிகரிக்க‍ எளிய மருத்துவம்..

ஆண்களே விந்தணுவில் பிரச்சனையா..? விந்து உற்பத்தியை அதிகரிக்க‍ எளிய மருத்துவம்..

113

சமீபத்தில் பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகில் 90 சதவீத ஆண்கள் போதிய விந்தணு உற்பத்தி இல்லாததால், ஆண்கள் மலட்டு தன்மை பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். இப்படி போதிய விந்தணு உற்பத்தி இல்லாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை உண்ணும் உணவுகளும், வாழ்க்கை முறையும் தான்.
அதுமட்டுமின்றி, தற்போது ஆண்கள் அதிக வேலைப்பளுவின் காரணமாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர்.

இதுவும் ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தும். உங்களுக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடக்க ஆரம்பித்தால், அப்போது கெட்ட பழக்கங்களை விட்டு, அப்போது உண்ணும் உணவிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தால், விந்தணுவின் உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.அதிலும் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து வந்தால், திருமணத்திற்கு பின் குழந்தை பெற முயற்சிக்கும் போது, எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. சரி, இப்போது விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும், விலை குறைவில் கிடைக்கும் சில உணவுப் பொருட்களைப் பார்ப்போம்.

டார்க் சாக்லெட்

ஆம், டார்க் சாக்லெட் சாப்பிட்டால் விந்தணுவின் உற்பத்தி அதிகரிக்கும். ஏனெனில் அதில் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. எனவே அவ்வப்போது டார்க் சாக்லெட் சாப்பிட்டு வாருங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பாத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ப்ரோமெலைன் என்னும் நொதி நிறைந்துள்ளது. இவை ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். எனவே தினமும் ஆண்கள் வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

வால்நட்ஸ்

வால்நட்ஸில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் பல்வேறு வகையான புற்றுநோயை தடுப்பதில் இருந்து, விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வரை பல நன்மைகள் அடங்கியுள்ளது. ஏனென்றால் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இவை விந்தணுவின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும், தரமானதாகவும் வைத்துக் கொள்ளும்.

பூண்டு

பூண்டுகளில் அல்லிசின் என்னும் பொருள் உள்ளது. இவை பாலுறுப்புகளுக்கு இரத்தத்தின் ஓட்டத்தை அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். எனவே ஆண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் பூண்டு சேர்த்து வருவது மிகவும் நல்லது.

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலில் நோய்களின் தாக்கத்தை குறைப்பதுடன், விந்தணுவின் உற்பத்தியையும் குறைக்கும்.

கடல் சிப்பி

கடல் சிப்பியில் விந்தணுவின் உற்பத்திக்கு வேண்டிய அத்தியாவசிய அமினோ ஆசிட்டுகள், ஜிங்க் நிறைந்துள்ளது. ஆகவே ஆண்கள் இதனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வருவது விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும்.

அவகேடோ

அவகேடோவில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தால், அவை விந்தணுவின் உற்பத்தி மற்றும் இயக்கத்தை அதிகரித்து, வலிமையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

மாட்டிறைச்சி

தோல் நீக்கப்பட்ட மாட்டிறைச்சியில் ஜிங்க் அதிகம் நிறைந்துள்து. எனவே ஆண்கள் இதனை மாட்டிறைச்சியை அவ்வப்போது சேர்த்து வந்தால், விந்தணுவின் அளவு அதிகரிப்பதுடன், பாலுணர்ச்சியும் சற்று தூண்டப்படும்.

மாதுளை

மாதுளையை சூப்பர் ஃபுட் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்தத்தில் உள்ள கெமிக்கலை குறைக்கும். இந்த கெமிக்கலானது விந்தணுவை அழிக்கும் திறன் கொண்டது. எனவே மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், விந்தணு அழிவதைத் தடுக்கலாம்.

செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும்.குடி போதையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க கொய்யா இலையை உண்ண கொடுத்தால் உடனே வெறி இறங்கும் என்பார்கள்.

தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து அலச வேண்டும்.கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.முடி வெடிப்புகளை தடுப்பதற்கு, கொய்யா இலையை அரைத்து பேஸ்ட் செய்து கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.கொய்யா இலையை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.

கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று குடித்து வந்தால் கொழுப்பை குறைக்கும். நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும். கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு காரணமாக இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.

கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் உங்கள் உங்கள் எடை குறைவதை நீங்கள் காணலாம்.கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும், வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை உடனே சரி செய்கிறது.

விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…

உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ஆர்ஓஎஸ் என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன.

ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும். புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.