பளிச்சிடும் உதடுகளைப் பெறும் எளிய வழிகள் அதிகமாக காபி குடிப்பது, அதிகளவு சூரிய வெளிச்சம் படுதல், புகைபிடித்தல் ஆகிய காரணங்களால், உதடுகள் கருமையாகின்றன. அவற்றை மீண்டும் புதுப்பொலிவுடன் மாற்றுவதற்கு பெரிதாக சிரமப்படத் தேவையில்லை.
வீட்டில் கிடைக்கும் எளிமையான பொருட்களைக் கொண்டே கருமையைப் போக்கி, பொலிவான உதடுகளைப் பெறமுடியும்.
எலுமிச்சை மற்றும் தேன்
எலுமிச்சை சாறு மற்றும் தேனை சம அளவு கலந்து, அதை உதட்டின் மீது தடவி ஒருமணிநேரம் கழித்து சுத்தமான துணியைக் கொண்டு துடைத்து எடுக்கவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களிலேயே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
கிளிசரின்
இரவு உறங்கச் செல்வதற்கு முன், காட்டனில் கிளிசரினைத் தொட்டு, உதட்டின் மீது தடவி வரவும். நீர் வறட்சியின் காரணமாகவே, கருமையான உதடுகள் உண்டாகின்றன. கிளிசரின், உதடுகளில் ஏற்படும் வறட்சியை தடுக்கிறது. உடலில் நீர் வறட்சியைக் குறைக்க, தினசரி 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம்.
பீட்ரூட்
உதடுகளில் உள்ள கருமையைப் போக்கி, நல்ல நிறத்தைத் தருவதில் பீட்ரூட் சாறு சிறப்பாக செயல்படுகிறது. பீட்ரூட் சாறில் உள்ள மினரல், உதடுகளில் உள்ள கருமையைப் போக்கவல்லது. பீட்ரூட் கிடைக்காத காலங்களில் பாதாம்கொட்டை எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
இத்தகைய எளிய வழிமுறைகளை மேற்கொண்டாலே போதும் உதடுகளின் கருமையைப் போக்கி, பளபளக்கும் சிவந்த உதடுகளைப் பெற முடியும்.