Home ஆண்கள் ஆண்களின் குறைபாடுகளும் அதற்கான இயற்கை மருத்துவத் தீர்வுகளும்…

ஆண்களின் குறைபாடுகளும் அதற்கான இயற்கை மருத்துவத் தீர்வுகளும்…

51

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை கஷ்டப்படுவதும் உழைப்பதும் சொல்லொன்னாத் துயரங்களைத் தாங்கிக்கொண்டும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது குடும்ப வாழ்வின் மகிழ்வுக்கு என்றால் அதனை யாரும் மறுப்பவர்கள் இருக்கப் போவதில்லை.

எனினும், குடும்ப வாழ்வின் மகிழ்ச்சிக்குக் காரணம் பணம் மற்றும் குழந்தைகள் மட்டுமன்றி அதனைவிட முக்கியமான விடயமொன்று உள்ளது.

*அது தான் தம்பதியினரின் இல்லற வாழ்வாகும்.*

இவ்வுறவானது, திருப்திகரமாக இருப்பதாக கணவன், மற்றும் மனைவியால் ஆத்மார்த்த ரீதியாக உணரப்படுமிடத்து குடும்பத்தின் முழுப் பிரச்சினையும் தூரமாகி விடுவதுதான் உண்மை.

இந்த ஒரு விடயம் அதிருப்தியாக கணவனால் அல்லது மனைவியால் உணரப்படுமிடத்து இதனை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாது என்ற காரணத்தினால், கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் சிறு சிறு விடயங்களையும் பெரிதுபடுத்தி மற்றும் அற்ப விடயங்களுக்கெல்லாம் அடிக்கடி சண்டையில் முடித்துக்கொள்ளும் தம்பதிகள் சமூகத்தில் நிறைந்துள்ளனர் என்பது தான் உண்மை.

இதற்கு மூலகாரணம் சில குறைபாட்டு நோயாகவும் இருக்கலாம்.

இவையெல்லாம் குறைபாடா? அல்லது நோயா? என்று கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ தெரியாமல் இருப்பதும் இன்னுமொரு பிரச்சினையாகும்.

பெண்களுக்கு ஏதும் குறைபாடு இருப்பின், அது தமது மாதவிடாய் சக்கரத்தின் அடிப்படையில் அல்லது குழந்தைப்பேற்றின் அடிப்படையில் இலகுவாக கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

*இதுவே ஆண்களுக்கு இருப்பின்??? என்ற கேள்வி எழலாம்.*

இவற்றைப் பற்றிய போதியளவு அறிவு பெண்களிடம் இல்லை என்றே கூறல் வேண்டும்.

ஆண்கள் அதனை தானாகவே உணர்ந்து கொள்வார்களேயானால், அவர்களுக்கு தாழ்வுச் சிக்கல் நிலமையை அவர்கள் உணர்வார்கள்.

இதன் வெளிப்பாடு, மனைவியுடன் காரணமின்றி வாக்குவாதம் புரிதல், ஏசுதல், சில சமயம் அடித்தல், புதிதாக புகைபிடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுதல், மனைவியை சந்தேகப்படுதல், மனைவிக்கு கடுமையான முறையில் கட்டளையிடுதல், பரஸ்பரம் கலந்துரையாடாமை, அளவுக்கு அதிகம் கோபப்படுதல் போன்ற குணங்குறிகளை வெளிப்படுத்தலாம்.

உண்மையிலேயே இல்லற உறவு என்பது மற்றொரு சந்ததியை உருவாக்குவதை மட்டும் உள்ளடக்காது.

மேலும், வாழ்வின் உச்ச ஆத்மார்த்தமான இன்பம், கவலைகளை மறத்தல், உளவியல் ரீதியான இன்பம், ஆரோக்கியம், பாதுகாப்பு போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும்.

இங்கே நாம் பார்க்கவிருப்பது ஆண் பாலியல் நோய்கள் பற்றியல்ல ஆண்களின் இல்லற உறவின் போதான குறைபாடுகள் பற்றியாகும்.

*வினைதிறனற்ற இல்லற உறவு:*

*இதற்குரிய பிரதான காரணங்கள்:*

1.உடற் சோர்வு – இது நீரிழிவு நோய், ஆஸ்துமா, நீண்ட நாள் மலச்சிக்கல், இரத்தச் சோகை, உளச் சோர்வு, அதீத வேலைப்பழு போன்ற காரணங்களினால் உருவாகலாம்

2.அணுக்களின் எண்ணிக்கை குறைவடைதல் – இது ஒரு நோய் நிலையாகும்

3.உறவை வேண்டுமென்றே தவிர்த்தல் – மாதவிடாய் நேரம், கர்ப்ப காலம், பாலூட்டும் காலம், இரவு வேலை, வெளிநாடு செல்லுதல் போன்ற காரணங்களினால் நேரலாம்

4.வேறு நோய்களினால் ஏற்படத்தக்க பக்க விளைவு – அதாவது, இருதய நோய்கள், வாயுக் கோளாறு, சிறுநீரக நோய்கள், சலக்கடுப்பு போன்றவற்றின் பக்க விளைவாகவும் இந்நிலமை ஏற்படலாம்

5.உளவியல் நோய்கள் – பதகளிப்பு, அழுத்தம்/நெருக்கீடு, குற்ற உணர்வு, மனைவியுடன் கலந்துரையாடாமை போன்ற உளவியல் நிலைமைகள்

6.அதீத மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம்

7.சுய இன்பம் காணுதல் – இன்று ஆண்களுக்கிடையில் அதிகமாக உள்ள பழக்கம்.

8.நீண்ட நேரம் பிரயாணம் செய்தல் – இதுவும் குறைபாடு ஏற்படுதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

கட்டுப்பாடின்றிய ஸ்கலிதம்:

அசாதாரணமாக சுய கட்டுப்பாடின்றி சிறுநீர் கழிக்கும் வேளையில், மலம் கழிக்கும் வேளையில், பாலியல் உணர்வின்போது மற்றும் பல சந்தரப்பங்களில் கட்டுப்பாடின்றி ஸ்கலிதமாகுவதாகும்.

*இதற்குரிய காரணங்கள்:*

1.அதிகளவு விந்து வெளியேற்றம்

2.விந்து அமிலத் தன்மையடைதல்

3.விறைப்படையாமை

4.அதீத உணர்வு – தேவையற்ற விடயங்களை அதிகமாக பார்த்தல்

*விரைவான வெளியேற்றம்:*

அதாவது இல்லற உறவுக்கு தயாராகும் வேளையில் அல்லது உறவின் தொடக்கத்திலேயே விந்து வெளியேறல் (5 நிமிடங்களை விட குறைந்த நேரத்திற்குள்).

*இதற்குரிய காரணங்கள்:*

1.சுய இன்பம் காணுதல்

2.பெற்றோரின் அதீத கட்டுப்பாடான வாழ்க்கை முறை

3.சிறு வயதிலேற்பட்ட மனவடு

4.தம்பதிகளுக்கிடையிலான அல்லது குடும்ப உறவுகளுக்கிடையிலான பிரச்சினை

5.மது மற்றும் புகைபிடித்தல்

6.சில வகை மருந்துகளின் நீண்டகால பாவனை

மேற்கூறிய குறைபாடுகள் அனைத்தும் குறித்த சில காலம் அவதானித்ததன் பின்பே முடிவுக்கு வருதல் அவசியமாகும்.

எடுத்த எடுப்பில் முடிவெடுத்தல் கூடாது.

மேலும் இவை அனைத்தும் இன்பகரமான இல்லற உறவுக்கு ஊறு விளைவிப்பதே தவிர குழந்தைப் பேரின்மைக்கு காரணமாக அமையாது.

இக்குறைபாட்டை நீக்குவதில் மனைவியின் ஒத்துழைப்பும், பொறுமையும் வினைத்திறனாக அமையும்.

இக்குறைபாட்டை மனைவியானவள் கணவனுக்கு இருப்பதாக உணரும் பட்சத்தில் கணவனுடன் கனிவுடனும் சூசகமாகவும் பேசி உளவளத்துணையாளர் ஒருவரிடம் அல்லது தகுந்த வைத்தியரிடம் கட்டாயம் அழைத்துச் செல்லுதல் வேண்டும்.

*தகுந்த வைத்திய மற்றும் உளவள ஆலோசனைகள் மூலம், எமது நடைமுறை வாழ்க்கையில் செய்யத்தக்க மாற்றங்கள் என்பவற்றின் மூலமாக மிக விரைவாக இக்குறைபாட்டை முற்றிலுமாக நீக்கி இன்பகரமான இல்லற இனிமையை அனுபவிக்கலாம்.*

யுனானி மருத்துவத்தைப் பொறுத்த வரையில் குறைபாடாகவிருக்கட்டும் அல்லது நோய் நிலையாக இருக்கட்டும் இவ்விரண்டிற்கும் தகுந்த தனித்துவமான வெற்றிகரமான சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன.

ஏனைய மருத்துவ முறைமைகளைப் போன்றல்லாது யுனானி மருத்துவ முறையைப் பொறுத்தமட்டில் ஒவ்வொருவரதும் உடல், உள நிலைமைகளுடன் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான மற்றும் தனித்துவமான முறையிலேயே சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, ஒவ்வொருக்கும் வழங்கப்படும் சிகிச்சைகளில் மாற்றங்கள் மற்றும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இதனால் இவ்வாறான மேற்கத்தேய மருத்துவம் கைவிடுகின்ற இது போன்ற பல்வேறு நோய் நிலமைகளுக்கு வெற்றிகரமான பிரத்தியேகமான சிகிச்சைகள் எமது துறையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆண்மை குறைபாடு பற்றிய உண்மையும் பொய்யும்…

இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். கோடிக்கணக்கான விந்தணுக்கள், பெண்ணுறுப்பிலிருந்து கர்ப்பப்பை நோக்கி செல்லும். இதில் துடிப்புடைய ஒரே ஒரு விந்தணு மட்டுமே முட்டையின் வெளிச்சவ்வை துளைத்து உள்ளே நுழைகின்றன.
பெண்ணுறுப்பிலிருந்து கர்ப்பபைக்கு கடந்து செல்ல வேண்டிய தூரம் 15 லிருந்து 25 செமீ ஆகும். இதன் பின்னரே கரு உருவாகிறது, சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்தபட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். ஆனால், இந்த எண்ணிக்கையின் குறைபாட்டால் ஆண்மைக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
ஆண்மை குறைபாட்டிற்கு காரணங்கள் என்ன?
அண்மையில் நடந்த ஆராய்ச்சியின்படி, சுமார் 25 சதவீதம் மன அழுத்தத்தின் காரணமாகவே இந்த ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதிக மது அருந்துதல், புகை மற்றும் போதைப்பழக்கம், நீரிழிவு நோய், மனநோய்கள், இரத்த கொதிப்பு, சில நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஆணுறுப்பு விறைப்படைகிறது.
அதிகமான வெப்பத்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது, உதாரணத்திற்கு இராசயன தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், கதிர்வீச்சுத்துறைகளில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. விந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும்.
நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட விந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். எனவே உடல்சூடும் ஒருவகையில் காரணமாகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் ஹார்மோன்(Testosterone) சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
இந்த காரணங்கள் உண்மையாதா?
மன அழுத்தம் ஒருவகையில் காரணமாக கூறப்பட்டாலும், விந்தணு குறைபாட்டிற்கு மன அழுத்தம் காரணமாகிவிடமுடியாது, ஏனெனில் மனஅழுத்தம் இருந்தால் உடலுறவில் சரியாக ஈடுபட முடியாத காரணத்தால் தான் விந்தணுக்கள் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
ஊட்டச்சத்துக்களில் விட்டமின் சி, ஜிங்க், செலினியம், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் போன்றவை விந்தணு உற்பத்திக்கு உதவுகின்றன. கைப்பேசி கதிர்வீச்சுகளால் ஆண்மை குறைபாடுகள் ஏற்படுகிறது என்று சொன்னாலும், அதனை நிரூபிக்கும் ஆய்வுகள் இன்னும் வெளியாகவில்லை.
உடல் சூடு ஒரு காரணமாக கூறப்படுவதால், சிலர் விதைப்பையை குளுமைப்படுத்தி விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்வார்கள், ஆனால் இதனால் எவ்வித பலனும் இல்லை, அதற்கு மாறாக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்த்தாலே போதுமானது.
வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளம் வயதிலும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்.
மேலும் BMI எனப்படும் உடல் எடை அளவு கோளில் 20 – 25 எனும் அளவில் இருப்பவர்களுக்கு நல்ல விந்தணு உற்பத்தி இருக்கிறது, இதுவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு இது குறைவு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.