Home அந்தரங்கம் ஆண்களை உறவில் ஏமாற்ற தூண்டும் மூன்று முக்கிய காரணங்கள்!

ஆண்களை உறவில் ஏமாற்ற தூண்டும் மூன்று முக்கிய காரணங்கள்!

47

maxresdefaultஆண்களை உறவில் ஏமாற்ற தூண்டும் மூன்று முக்கிய காரணங்கள்!

யார் ஒருவரும், காரணமே ஒன்றி ஒரு உறவில் இருந்து ஏமாற்றி பிரிய எண்ண மாட்டார்கள். சில சூழல், அந்த சூழலில் அவர்களுக்கு கிடைக்காத ஒன்று வேறு பக்கம் கிடைக்கிறது என்றால் தான் நகர்வார்கள்.

ஆண்கள் எப்போதுமே பெண்கள் விஷயத்தில் வீக். அவர்கள் ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை தேடுவார்கள், என பல பெண்களும், ஏன் சில ஆண்களே கூட சமூக மேடைகளில் பேசுவார்கள். இது சில சதவீதம் உண்மை தான். யார் ஒருவரும், காரணமே ஒன்றி ஒரு உறவில் இருந்து ஏமாற்றி பிரிய எண்ண மாட்டார்கள். சில சூழல், அந்த சூழலில் அவர்களுக்கு கிடைக்காத ஒன்று வேறு பக்கம் கிடைக்கிறது என்றால் தான் நகர்வார்கள். அப்படி, ஆண்களை உறவில் ஏமாற்ற தூண்டும் மூன்று முக்கிய காரணங்கள்…

நீண்ட இடைவேளை… உணர்வு, மனம், உடல் ரீதியாக நீண்ட நாட்கள் பிரிவு அல்லது பெரிய இடைவேளை உண்டானால், ஆண்களுக்கு ஏமாற்றும் எண்ணம் அதிகரிக்கலாம். இந்த எண்ணம் எழக் காரணம் உறவில் இருந்த பிணைப்பு குறைவது தான்.

உணர்ச்சி எழும்புதல்… மனம் ரீதியாக, உடல் ரீதியாக காணாத ஒன்று, அனுபவிக்காத ஒன்று. வேறு நபரிடம் கிடைப்பதாக அல்லது முயற்சி செய்தால் கிடைக்கும் என்ற எண்ணம் ஆண்கள் மனதில் எழுந்தால் அவர்கள் ஏமாற்ற முயற்சிப்பார்கள்.

உணர்வு கொந்தளிப்பு! ஏதேனும் இழப்பு அல்லது தோல்வி காரணமாக மனம் உடைந்து அல்லது மிகவும் ஆவேசமான மனநிலையில் இருக்கும் போது ஆண்களின் மனநிலை அடிக்கடி மாறும். இதுப் போன்ற தருணத்தில் துணையும் புரிந்துக் கொள்ளாமல் தினமும் புண்படுத்திக் கொண்டே / சண்டையிட்டுக் கொண்டே இருந்தால் ஏமாற்றும் எண்ணம் ஆண்களின் மனதில் அதிகரிக்கலாம்.

சுவாரஸ்யம்! இதுப் போன்ற ஏமாற்றும் எண்ணம் ஆண்களின் மனதில் எழாமல் பார்த்துக் கொள்ள பெண்கள் அவர்களது துணையை எப்போதும் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் மீதான ஆசையில் துளி அளவும் குறையாமல் இருக்கும்படி ஆண்களை பார்த்துக் கொள்ள வேண்டும்.

மறக்கக் கூடாது… ஆயிரம் மைல் தூரம் கடந்து சென்றாலும், தனக்கானவள் ஒருத்தி அங்கு இருக்கிறாள் என்ற எண்ணம் மறக்காமல் இருக்கும் படி செய்களில் ஈடுபட வேண்டும். லவ் யூ, மிஸ் யூ சொல்வது…, அவ்வபோது ஆச்சரியப் படும் அளவிற்கு ஏதேனும் செய்து அசத்த வேண்டும்.

அவருக்காக, அவருடன்… உறவில் பிரிவு ஏற்படுவது போன்று தெரிந்த பிறகு தான், நீங்கள் நேரம் ஒதுக்கு பேசிக் கொள்ள வேண்டும், உறவை மீட்டெடுக்க வேண்டும் என்றில்லை. தினமும் ஒரு 10 நிமிடமாவது உங்கள் துணைக்கென ஒதுக்கி நேரம் செலவிடுங்கள். அதுவே உங்கள் உறவில் எந்த பிரச்சனையும் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.

தொல்லைக் கொடுக்க வேண்டாம்… உங்கள் துணை “ஐந்து நிமிடம் ஃப்ரீயா விடு…” என்று கூறினால் ஐந்து நிமிடம் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருங்கள். என்ன ஆச்சு, என்ன ஆச்சு என அவர்களை தொல்லை செய்ய வேண்டாம். ஒரு விஷயம் முடியவில்லை என்றால் அதற்கான காரணத்தை புரிந்துக் கொள்ளுங்கள். குருட்டுத்தனமாக அவரிடம் மீண்டும், மீண்டும் கடுப்பாக்கும் முறையில் பேசி தொல்லை செய்ய வேண்டாம்.