Home ஆரோக்கியம் இது ஆண்களுக்கு மட்டும்! ஆண்களே இதை கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்

இது ஆண்களுக்கு மட்டும்! ஆண்களே இதை கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்

26

தற்போதைய காலத்தில் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?
ஆண்களின் வயதான காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள்.
ஆண்களிடம் இருக்கும் ஆண் தன்மை குறித்த செயல்பாடுகளை அவர்களின் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் தீர்மானிக்கிறது.
ஆண்களின் இந்த ஹார்மோன், ஆண்களின் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி தூண்டுதல் மூலம் விதைப்பையில் சுரக்கிறது.
டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் பாலியல் மற்றும் மனம் ரீதியாக ஆண்களின் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. ஆண்கள் இந்த ஹார்மோன் குறித்த பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
ஆண்கள் மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கங்கள் மூலம் விந்தணு கோளாறுகள் தொடர்பான பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் நீரிழுவு நோய் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள்.
ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என்ன?
ஆண்கள் அன்றாடம் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த இதமான உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் அவர்களின் உடல் மற்றும் மனம் செழிப்பாக இருக்கும்.
ஆண்கள் சர்க்கரை நோயைத் தவிர்க்க, உடலில் சரியான அளவில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் பாசிப்பயறு, நெய், கடலை போன்ற உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.
ஆண்களுக்கு கபம், பித்தம், வாதம் என்று மூன்று விதமான தோஷங்களில் இருந்து விடுபட தினமும் பழங்கள், பாதாம், முந்திரி, பேரீச்சை, பிஸ்தா, ஆட்டு இறைச்சி போன்ற இரும்புச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
ஆண்கள் தூக்கம் தொடர்பான மற்றும் குழந்தையின்மை தொடர்பான மருந்துகளை இரவில் சாப்பிடுவதற்கு முன் எடுத்துக் கொண்டு 3 மணி நேரம் கழித்து உறங்க வேண்டும்.
ஆண்கள் மலச்சிக்கல் பிரச்சனைக்கான மருந்தை தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் வாழைப்பழத்தை இரவு உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். தண்ணீரை அதிகமாகவும் குடிக்கக் கூடாது.