ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு வரலாற்று ரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80% மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல்(libidonal energy), பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருவது என்றும் பாலியல் ஆய்வு சொல்கிறது.
மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் தொடக்கி பிள்ளைகளை அடிப்பது வரை 40 வகைகள் எனச் சொல்கிறது அந்த ஆய்வு. மேலும் பெண்களை உச்சக்கட்டம் அடையவைப்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட் மசாஜ் தொடக்கி ஜி ஸ்போட் வரை அது தொடர்கிறது.
ஆண், பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. பெண் தானே அதை அடைவதை தவிர வேறு வழி இல்லை. அதாவது ஒரு பெண் கலவியில் சுதந்திரமாக ஈடுபட்டு தன மன நிலை மற்றும் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவளது உச்சகட்டத்துக்கு ஆண் உதவுவது தான் ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். ஆண்கள் புற விளையாட்டுகளில் (foreplay) அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகிறார்கள்.
பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக்(erotic site) கருதாமல், ஒரு பாலியல் விளையாட்டாக(sexual act) மாற்ற வேண்டும். பாலியலை நமது தன்மையில் இருந்து(ego)கழற்ற வேண்டும். பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச் செயல்(basic instinct) என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பாலுறவில் பெண் உச்சம் என்ற நிலையை அடைய, பாலுறவில் கட்டமைக்கப்பட்டுள்ள அணைத்து ஒழுங்கு விதிமுறைகளையும் உடைக்க வேண்டும். அதவாது பலவகையான செக்ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பரவலான பயம் அற்ற புரிதல் வேண்டும். ஆண், பெண் இருவரும் செக்ஸ் பற்றிய முழுமையான புரிதலுடன் சந்தோஷமாகச் செயல்படும் நிலையில், பெண் தாமதம் இல்லாமல் ஆணுடன் இணைந்து ஒரே நேரத்தில் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியும்.