Home ஆண்கள் ஆண்மை பெருக ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சிக்கான காரணம் எப்படி கண்டறியப்படுகிறது?

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சிக்கான காரணம் எப்படி கண்டறியப்படுகிறது?

174

ஆணுறுப்பின் நுனியின் (ஆணுறுப்பு மொட்டு) சிவப்பு நிறம் மற்றும் அழற்சியுற்றத் தோற்றத்தின் மூலம் ஒரு மருத்துவரால் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியை எளிதில் கண்டறிய முடியும். சில நேர்வுகளில், அழற்சியின் தோற்றதை வைத்து ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியின் அநேகமான காரணத்தைத் தீர்மானிக்க முடியும். உதாரணத்திற்கு, இருதிரிபு காளானால் ஏற்படும் அழற்சி பெரும்பாலும் மிகவும் வழக்கமானதாகத் தோற்றமளிக்கும். எனவே, சில குறிப்பிட்ட நேர்வுகளில் உங்கள் மருத்துவரால் காரணத்தைக் கண்டறிய முடியும் மற்றும் உடனடியாகச் சிகிச்சையை அறிவுறுத்த முடியும்.

உங்கள் மருத்துவரால் காரணத்தைப் பற்றி உறுதியாகக் கூற இயலவில்லை எனில், அல்லது அவரால் அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி அழிந்தொழியவில்லை எனில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பின்வரும் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்:

ஒரு மெல்லிய குச்சியின் நுனியில் உள்ள சிறிய பருத்திப் பந்தில் (ஒரு மருந்திட்ட பஞ்சுறை) ஒரு மாதிரிக்கூறை எடுத்தல். இந்த மாதிரிக்கூறு, நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய சில குறிப்பிட்ட கிருமிகள் (பாக்டீரியா) உள்ளனவா எனக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

நீரிழிவு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதை உறுதிசெய்வதற்கான பரிசோதனை.

பாலுறவு மூலம் கடத்தப்படும் ஒரு நோய்த்தொற்று ஒரு சந்தேகத்திற்கிடமான காரணமாக இருந்தால், இனப்பெருக்க மற்றும் சிறுநீரக மண்டலம் சார்ந்த மருந்தளிக்கும் (GUM) மருத்துவமனைக்குப் பரிந்துரை.

தோலின் நிலைமை அல்லது ஒவ்வாமை தான், நோயிற்கான காரணமாக இருக்க முடியும் என யூகிக்கப்பட்டால், தோல் நோய்நிபுணருக்கு பரிந்துரைக்கப்படலாம். ஒவ்வாமை இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதை உறுதிசெய்வதற்காக ஒவ்வாமைப் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படலாம்.

அரிதான நேர்வில், அழற்சி தொடர்ந்து நீடித்தால், removing a small sample of the inflamed skin tissue (a biopsy) (அழற்சி இருக்கும் தோல் திசுவின் பகுதியினை, மாதிரிக்கு சிறிதளவு நீக்குதல் / எடுத்தல் (பயாப்ஸி)) பரிந்துரைக்கப்படலாம். இதில், மாதிரிக்கூறு எடுக்கப்பட்டு நுண்ணோக்கியில் கீழ் நுண்ணாய்வு செய்யப்படும். இதன் மூலம், காரணம் கண்டறியப்படும்.