Home பெண்கள் அழகு குறிப்பு ஷேவிங் செய்யும் சரியான முறை

ஷேவிங் செய்யும் சரியான முறை

38

பொருத்தமான ரேசரைக் கொண்டு தேவையற்ற முடிகளை அகற்றுவதையே ஷேவிங் என்கிறோம். ஆண்கள் பருவமடைந்து முகத்தில் முடி முளைக்கத் தொடங்கியதும் ஷேவ் செய்யத் தொடங்குவார்கள். இந்தக் கட்டுரை முக்கியமாக ஆண்களுக்கானது. பெண்கள் உடலின் ரோமங்களை அகற்றுவது பற்றிய குறிப்புகளுக்கு, இந்தக் கட்டுரையின் கீழ்ப்பகுதியில் உள்ள இணைப்புகளுக்குச் செல்லவும்.

ஷேவ் செய்யத் தொடங்க சரியான காலம் (The right time to start shaving)

எப்போது ஷேவ் செய்யத் தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபாடும். அது அவர்களது முகத்தின் முடி வளர்ச்சியையும் தங்கள் உடல் தோற்றம் பற்றி அவர்கள் எந்த அளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதையும் பொறுத்ததாகும்.

சரியான ரேசரைத் தேர்வு செய்தல் (Selecting the right razor)

ஒரு பொருத்தமான ரேசரை பின்வரும் விஷயங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்:

பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்திவிடும் ரேசர்கள்: பயன்படுத்திய பிறகு முழு ரேசரையும் அப்புறப்படுத்திவிடுவோம். இப்போது இவையே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

வழக்கமான ரேசர்கள், இவற்றில் ஒவ்வொரு முறையும் பிளேடை மட்டும் மாற்றிக்கொள்வோம்.

எலக்ட்ரிக் ரேசர்: இவை கையடக்கமானவை பயன்படுத்துவதும் எளிது. சில எலக்ட்ரிக் ரேசர்களைக் கொண்டு ஷேவ் செய்யும்போது, பிளேடில் ஷேவ் செய்வதைப் போன்ற நெருக்கமான ஷேவிங் கிடைக்காது.

ரேசர் குறித்து அக்கறை செலுத்தும் முன்பு, உங்கள் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் ஆலோசனை பெறலாம், ஷேவ் செய்வதற்கான சரியான அடிப்படை முறைகளை அவர்கள் உங்களுக்கு சொல்லித் தரக்கூடும். சரியான டிஸ்போசபில் ரேசரைக் கண்டறிவதற்காக வெவ்வேறு பிராண்டுகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

பிளேடைப் பொருத்திப் பயன்படுத்தும் ரேசரைப் பயன்படுத்தும்போது, ஷேவிங் கிரீம் அல்லது ஜெல்லைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். மாய்ஸ்டுரைஸர், மெந்தால் போன்ற பலவகையான ஷேவிங் ஜெல்கள் கிடைக்கின்றன. இவை சருமத்திற்கு வழவழப்பை அளித்து, சருமம் உலராமல் தடுக்க உதவுகின்றன. சரியான ஷேவிங் கிரீம் அல்லது ஜெல் உங்களுக்குக் கிடைக்கும் வரை, வெவ்வேறு பிராண்டுகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம். நுரையைக் கொண்டு எங்கு ஷேவிங் செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும், இதுவும் ஒரு நன்மை.

சரியான முறை (The right way)

வெதுவெதுப்பான நீரில் குளிக்கும்போது அல்லது குளித்த பிறகு முடி மிருதுவாகி, சருமத் துளைகள் நன்கு திறந்திருப்பதால் அப்போது ஷேவ் செய்வது நல்ல பலனைத் தரும், எரிச்சலும் குறைவாக இருக்கும். மற்ற நேரங்களில் ஷேவிங் செய்வதாக இருந்தால், வெதுவெதுப்பான நீரை முகத்தில் தெளித்து ஷேவ் செய்யவும்.

ஷேவிங் ஜெல் அல்லது கிரீம் பயன்படுத்தி முகத்தின் பக்கவாட்டிலும் உதடுகளிலும் தாடையிலும் தொண்டையிலும் கழுத்துப் பகுதியிலும் நன்கு நுரைக்கச் செய்யவும். எப்போதும் சுத்தமான ரேசரைப் பயன்படுத்தவும், உங்கள் ரேசரை ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

எந்த வகை ரேசரைப் பயன்படுத்தினாலும், முடி வளரும் திசையிலேயே ஷேவ் செய்ய வேண்டும். எதிர்த்திசையில் செய்யக்கூடாது. ஷேவ் செய்யும்போது, சரியான அளவிலேயே அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவும்.

முடி வளரும் திசைக்கு எதிராக ஷேவ் செய்வதால் ராஷஸ், தோல் சிவத்தல், வெட்டுக் காயம், முடி உள்ளே சுருண்டு வளர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஒவ்வொரு முறை ஷேவ் செய்து இழுத்த பிறகும், நுரையையும் அதிலுள்ள ரோமங்களையும் நீரில் கழுவி அகற்றவும். இளம் ஆண் பிள்ளைகளுக்கு ஒரு முறை ஷேவ் செய்தால் போதுமானது.

நீரால் லேசாக முகத்தைக் கழுவி, ஆஃப்டர் ஷேவ் லோஷனைப் பயன்படுத்தவும். அது சருமத்தின் எரிச்சல் தணிய உதவும்.

அதன் பிறகு மீண்டும் முடி எவ்வளவு சீக்கிரம் வளர்கிறது என்பதைப் பொறுத்து, இதே முறையில் மீண்டும் ஷேவ் செய்யவும்.

வெட்டுக் காயங்களும் வடுக்களும் (Cuts and nicks)

ஷேவ் செய்யும்போது சில சமயங்களில் வெட்டுக் காயங்களும் வடுக்களும் ஏற்படுவது சகஜம் தான். அதைத் தவிர்க்க முடியாது. தழும்புகள் ஏற்படாமல் தடுக்க, எப்போதும் சுத்தமான, கூர்மையான பிளேடுகளையே பயன்படுத்தவும். வெட்டுக் காயங்களோ வடுக்களோ தோன்றினால், ஆன்டிசெப்டிக் மருந்துகளைப் பயன்படுத்தவும். பிளேடுகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் ஒரே ரேசரை விடுத்து டிஸ்போசபில் ரேசருக்கு மாற முயற்சி செய்யவும். ஷேவிங் மென்மையாக இருக்க, ஷேவிங் கிரீம் அல்லது ஜெல்லைப் பயன்படுத்தி நன்கு நுரைக்கச் செய்யவும்.