Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஆண்களே மார்பகம் பெண்களின் மார்பகம் போன்று உள்ளதா கண்டிப்பா படியுங்கள்…

ஆண்களே மார்பகம் பெண்களின் மார்பகம் போன்று உள்ளதா கண்டிப்பா படியுங்கள்…

29

ஆண், பெண் உடல் கூறுகள் ஒரே மாதிரி இருப்பவை கிடையாது. உடலின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் நிறையவே மாற்றங்கள் இருக்கின்றன. வெளிப்புற தோற்றத்தில் சில பாகங்கள் ஆண்களுக்கு இப்படி தான் இருக்க வேண்டும், பெண்களுக்கு இப்படி தான் இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது.

இதில், மார்பகம் முக்கியமாக காணப்படும் ஒன்று. சில ஆண்களுக்கு பெண்களை போன்ற மார்பக அமைப்பு இருக்கும். இது ஹார்மோன் பிரச்சனை என்றாலும் கூட, இதனால் அவர்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்….

ஆண் மார்பகம்! ஆண் மார்பகம் (அ) மூப்ஸ் (Moobs) எனப்படும் இது பதின் வயதுகளில் சில ஆண் பிள்ளைகளின் உடலில் திடீரென ஏற்படும் மாற்றமாக காணப்படுகிறது. பெரும்பாலான ஆண்களுக்கு தட்டையான மார்பகம் தான் இருக்கும். ஆனால், சிலர் மத்தியில் மட்டுமே பெண்களின் மார்பு போன்ற தோற்ற அமைப்பு தென்படுகிறது.

பாதிப்பு! இந்த அமைப்பை தங்களிடம் மட்டும் காணும் சில ஆண்கள் காலப்போக்கில் மன அதிர்வு நோய்க்கு ஆளாகின்றனர். இதனால், அவர்களுடைய மனநலத்தில் மாற்றங்கள் உண்டாகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆடைகள்! தங்கள் மார்பக அமைப்பை வெளிப்படியாக தெரிவதில் இருந்து மறைக்க இவர்கள் லூசான ஆடைகள் அணிவதை தெரிவு செய்கின்றனர்.

சாத்தியமற்றது! மேலும், ஒவ்வொரு நாளும் இவர்கள் காலை எழும் போது தங்கள் மார்பு பகுதி சாதாரண நிலையில் மாறிவிடும் என்ற நம்பிக்கை கொள்ளலாம். ஆனால், அது சாத்தியமற்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஹார்மோன்ஸ்! இந்த மூப்ஸ் பிரச்சனைக்கு காரணம் ஹார்மோன்கள் தான். இந்த மார்பக அமைப்பினால் இவர்கள் நீச்சல், வீட்டில் சட்டை இன்றி இருப்பது போன்ற சில சாதாரண செயல்களில் கூட ஈடுபட தயங்குகிறார்கள்.

மருத்துவ சிகிச்சை! ஆனால், இதிலிருந்து விடுப்பட வலியற்ற எளிய சிகிச்சை முறை இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். வெறும் ஒரே நாளில் இதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு வார இறுதியில் நீங்கள் இதற்கான தீர்வை பெற்றுவிடலாம். இதற்காக நீங்கள் அணுக வேண்டியவர்கள் மார்பக பிளாஸ்டிக் சர்ஜன் நிபுணர்கள்.