Home உறவு-காதல் ஆழமா முத்தம் கொடுங்க ஆயுள் அதிகரிக்கும் – ஆனா நோய் தொற்றும் வருமாம் எச்சரிக்கை

ஆழமா முத்தம் கொடுங்க ஆயுள் அதிகரிக்கும் – ஆனா நோய் தொற்றும் வருமாம் எச்சரிக்கை

189


மதுரை: உடல் உறவு கொள்ளும் போது பரவும பால்வினை நோய் தற்போது ஆழமான முத்தங்களை பரிமாறிக்கொள்வதன் மூலமும் வருகிறதாம். அதாவது உதட்டோடு உதடு வைத்து நச்சென்று கொடுக்கும் முத்தம் மூலம் நோய்களும் பரவுகிறது என்று சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. முத்தம் கொடுத்துக்கொண்டால் கொனோரியா என்ற தொற்றுக்கிருமி மூலம் பால்வினை நோய் பரவுகிறது என்று எச்சரிக்கிறது ஆய்வு.

முத்தம் என்றால் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் மகிழ்ச்சியான விசயம்தான். முத்தம் கொடுத்தால் உடலிலும் மனதிலும் உற்சாகம் ஊற்றெடுக்கும். முத்தம் கொடுப்பது சாதாரண விசயமில்லை. ஒரு முத்தத்திற்கு நூற்றுக்கணக்கான தசைகள் இயங்குகின்றன. ஒரு முறை முத்தமித்தால் 26 கலோரிகள் குறைவதாக சொல்கிறது ஒரு ஆய்வு. இந்த ஆய்வு முடிவு மகிழ்ச்சியை அளித்தாலும் மற்றொரு ஆய்வு முடிவு முத்தமிடுவதால் ஏற்படும் நோய் பாதிப்பை பற்றி தெரிவிக்கிறது.

Kissing
முறையற்ற உடல் உறவு கொள்வதன் மூலம் இந்த கொனோரியா கிருமியானது வெட்டை நோயை உருவாக்கக் கூடியது. இனப்பெருக்க உறுப்பு வழியாக பரவக்கூடிய இந்த நோயானது தற்போது வாய் வழியாகவும் பரவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக பேராசிரியர் கிட் ஃபேர்லி, இந்த ஆய்வு முடிவுகள் பற்றி சுகாதார அமைப்புகள் அதிக கவனத்தில் கொள்வதோடு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த ஆய்வு முடிவு தி லான்செட் ஜர்னலில் வெளியிட்டுள்ளனர்.

சிலர் ஆசையோடு தங்கள் துணையை முத்தமிடுவார்கள். சிலருக்கு முத்தம் என்றாலே அலர்ஜிதான். முத்தம் கொடுப்பதன் மூலம் மன அழுத்தம் குறையும் என்று பல ஆய்வுகள் கூறியுள்ளன. முத்தமிட்டுகொள்பவர்களின் ஆயுள் 5 ஆண்டுகள் அதிகரிக்கிறது. முத்தமிடும்போது இதயம் வேகமாக துடிக்கிறது. இதனால் கொழுப்புகள் குறையும் இது உடற்பயிற்சிக்கு சமமானது என்றும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நூற்றாண்டுகளாக தொடரும் முத்தம்

முத்தத்தின் தேவையும் அவசியமும் பல நூற்றாண்டுகாலமாகவே இருக்கிறது. கி.பி மூன்றாம் நூற்றாண்டில் ரோமானிய நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் தங்கள் கணவர் வேலை முடிந்து வீடு திரும்பும் போது முத்தமிடுவார்கள். காரணம் காதல் அல்ல தனது கணவர் மது குடித்திருக்கிறாரா என்பதை கண்டறியத்தானாம். அதே போல ஒருமனிதன் தன் ஆயுளில் 336 மணிநேரங்கள் முத்தமிட்டுக்கொள்கிறாராம். 45 வயதிற்கு மேற்பட்ட மக்களில் ஐந்து சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு 31 முறையாவது முத்தமிடுகிறார்களாம். சில ஜோடிகள் முத்தத்தில் சாதனை எல்லாம் கூட நிகழ்ச்சி பரிசு வாங்கியிருக்கிறார்களாம்.

கை விரல்களால் துணையை தடவுவதை விட உதட்டினால் கொடுக்கும் முத்தத்திற்கு சக்தி அதிகம். காரணம் கை விரல்களைக் காட்டிலும் உதட்டிற்கு அதிக உணர்ச்சி இருக்கிறது. கண்ணத்தில் கொடுக்கும் முத்தம், உதட்டில் ஒற்றி எடுக்கும் முத்தம், மூன்றாவது பிரெஞ்சு முத்தம். சாதா முத்தம் வரை சத்தான பிரெஞ்ச் முத்தம் வரை பரிமாறிக்கொள்பவர்கள் வாய் வழியாக மில்லியன் கணக்கில் நுண்ணியிரிகளையும் பரிமாறிக்கொள்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.

பால்வினை நோய் கிருமி பரவும் விதம் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3600 ஆண்கள் பங்கேற்றனர். கிருமி பரவும் விதம், அதை கட்டுப்படுத்துவது எப்படி என்றெல்லாம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களை உடலுறவு இல்லாமல் முத்தம் மட்டுமே கொடுக்கச் சொன்னார்கள். பாவம் அந்த ஜோடி முத்தம் மட்டுமே கொடுத்துக்கொண்டு உறவில் ஈடுபடாமல் இருந்தனர்.

அதே போல சில ஜோடிகள் முத்தம் கொடுக்காமல் உடலுறவில் மட்டுமே ஈடுபட்டனர். இந்த ஜோடிகளை மாதக்கணக்கில் வாரக்கணக்கில் கண்காணித்தனர். இதில் முத்தம் கொடுக்காமல் உறவில் ஈடுபட்டவர்களைக் காட்டிலும் வெறும் முத்தம் மட்டுமே கொடுத்தவர்களுக்கு அதிக அளவில் நோய் தொற்று பரவியிருந்தது. இந்த பால்வினை நோய் பலருக்கும் பரவியிருந்தாலும் இது குணப்படுத்த முடியாத நோயாகவே இருக்கிறது. இதுவரைக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.

இந்த நோய்க்கு மருந்து இல்லை என்பதால் நோய் வராமல் தப்பிப்பது எப்படி என்று ஆலோசனையை கூறியுள்ளனர். அதாவது உங்களின் அன்பானவர்களுக்கு முத்தம் கொடுப்பதற்கு முன்பு நன்றாக பல்லை விளக்கி சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். மவுத்வாஷ் மூலம் வாயை சுத்தப்படுத்தி ஹைஜீனிக்காக முத்தம் கொடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

முத்தம் மட்டுமல்ல சுத்தமான உடல் உறவும் நோய் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும். உடல் சுகாதாரம் உங்களை பாதுகாக்கும் என்றும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு தி லான்செட் ஜர்னலில் வெளியிட்டுள்ளனர். ஆகவே மக்களே முத்தம் கொடுக்கணும் என்று ஆசைப்படுபவர்கள் இனி சுத்த பத்தமா முத்தம் கொடுங்க… இல்லாட்டி தொற்று கிருமி தொத்தி பால்வினை நோய் ஏற்படும். அப்புறம் அதுக்கு மருந்தே கிடையாது பாத்துக்கங்க.