டாப்ஸி தனது பின்பகுதியில் வரைந்துள்ள டாட்டூ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோலிவுட், பாலிவுட்டில் டாட்டூ கலாசாரம் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. போட்டி போட்டுக்கொண்டு டாட்டூ வரைந்து ஒருவரையொருவர் முந்தப் பார்க்கின்றனர்.
சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் தனது உடம்பில் 5 வது முறையாக டாட்டூ வரைந்து உடலில் அதிக இடங்களில் டாட்டூ வரைந்த நடிகை என்ற பெயரை தட்டிச் சென்றார்.
இடுப்பு பகுதி, கழுத்து, கை, கால் என பல இடங்களில் டாட்டூ வரைவதில் நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மற்றவர்களின் கவனத்தை கவர இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் டாப்ஸி டாட்டூ வரைந்திருக்கிறார்.
இடுப்புக்கும், தொடைப்பகுதிக்கும் நடுவில் தனது பெயரை வரைந்திருக்கிறார்.
இது பற்றி அவர் கூறும்போது, ‘ஏற்கனவே எனது கணுக்காலில் டாட்டூ வரைந்திருக்கிறேன். தற்போது இடுப்பின் பின்பகுதியில் வரைந்திருக்கிறேன்.
இங்கு வரைந்ததற்கு காரணம் இந்த 2 இடங்களையும் அடிக்கடி பார்க்க முடியாது. எப்போதாவதுதான் பார்க்க முடியும்.
அடிக்கடி டாட்டூவை பார்த்தால் போர் அடித்துவிடும். அதனால்தான் இந்த இடத்தில் வரைந்தேன்’ என்று கூலாக பதில் சொல்கிறார். இது ஆபாசமாக இருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.