Home அந்தரங்கம் 18+ வயது வந்தோருக்கு மட்டும்! பொதுவெளியில் நடந்த முகம் சுளிக்க வைக்கும் விடயம்!

18+ வயது வந்தோருக்கு மட்டும்! பொதுவெளியில் நடந்த முகம் சுளிக்க வைக்கும் விடயம்!

169

தோழி ஒருவருக்கு கடந்த ஆண்டு பன்னாட்டு கம்பெனியில் வேலை கிடைக்கவே, பெரு நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அவ்வப்போது அங்கு நடக்கும் அழகான விஷயங்களை பகிர்ந்து கொள்வார். நாம் அரிதாக ‘இப்படியும் நடக்குமா?’ என சிந்திக்கும் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்வார். சமீபத்தில் அவர் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயம்,

தோழி, இரவு உணவு அருந்திவிட்டு அறைக்கு செல்வதற்குள் மழை வந்துவிடவே, தனது தோழியுடன் சாலையில் ஒதுக்கு புறமாக நின்றுள்ளனர். அடை மழை ஓயவே, வேகமாக இருவரும் அறைக்கு விரைந்துள்ளார். மீண்டும் மழை பிடிக்கவே, திரும்ப மழைக்கு ஓரிடத்தில் ஒதுங்கியுள்ளனர். அந்த இடத்தில் நிகழ்ந்த சம்பவத்தை தான் தோழி பகிர்ந்து கொண்டார். காதலர்கள் இருவர்கள் தங்களது முத்தங்களை பகிர்ந்து கொண்டு இருந்துள்ளனர். அப்படி ஒரு பெருநகரத்தில் இது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நிகழக்கூடியது தான். இதில் என்ன இருக்கிறது என கேள்வி எழுப்பியதற்கு தோழியின் பதில்,

நாங்கள் மட்டுமின்றி சில நடுத்தர வயதினர் மற்றும் குழந்தைகளும் அங்கு நின்று கொண்டிருந்தனர். நாங்கள் இருப்பதை அறிந்தும் காதலர்களது உதடுகள் பிரியவில்லை. அதே இடத்தைவிட்டு சில தூரத்தில் வேறு இரு காதல் ஜோடிகள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எங்களது வருகையை கண்டதும் விலகி ஓடிவிட்டனர். இவர்கள் செய்ததை ஏன் அந்த இரு ஜோடிகள் செய்யவில்லை என ஒரே ஆச்சர்யத்தோடு தோழியிடம் கேள்வி எழுப்பினேன்.

அந்த இரு காதலர்கள் மனிதர்கள் அல்ல இரண்டு நாய்கள். இந்த காதலர்களுக்குள் உள்ள நாணம் ஏன் அவர்களுக்கு இல்லாமல் போனது? என்னதான் தனக்கு உரியவன் உரியவளாக இருப்பினும் பொதுவெளியில் பார்த்து செயல்பட வேண்டாமா?