Home சூடான செய்திகள் கன்னித்தன்மை உள்ளவருக்கே வேலை

கன்னித்தன்மை உள்ளவருக்கே வேலை

16

இளம்பெண்கள் தங்கள் கல்வி சான்றிதழ்களுடன், கன்னித்தன்மை சான்றிதழும் கொடுத்தால்தான் வேலை வழங்கப்படும் என பிரேசில் மாநில அரசு ஒன்று அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பிரேசிலின் சா போலோ மாநில அரசுதான் இத்தகைய அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வித்துறையில் வேலை தேடும் இளம்பெண்கள், தாங்கள் கன்னித்தன்மை உடையவர்கள் என்பதை நிரூபிப்பதற்காக டாக்டரை அணுகி பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும்.

இது குறித்து மாநில கல்வித்துறை கூறுகையில், ‘புதிதாக வேலையில் சேரும் இளம்பெண்கள், தங்களுக்கு புற்றுநோய் இல்லை என்பதை நிரூபிக்கவும், பாலியல் விவகாரங்களில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்கவும் மருத்துவரிடம் இருந்து சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும்’ என்று கூறியிருந்தது.

மாநில அரசின் இத்தகையை அறிவிப்பை, இளம்பெண்கள் மட்டுமின்றி மனித உரிமை ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, இந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.