வரையறை
மேற்கண்ட வரையறையில் இவ்வளவு நேரத்திற்கு முன்னமே விந்து வெளிவருதல் என்பது போன்ற திட்டவட்டம் எதுவும் இல்லை. ஓருவர் 10 நிமிடத்தில் உச்சநிலை அடைகிறார். அவரின் பாலியல் துணை 20 நிமிடத்தில் உச்சநிலை அடைகிறார் என்றும் கொண்டால் இது விந்து முந்துதல் ஆகும். இதே 10 நிமிடத்தில் இன்னொருவர் உச்ச நிலை அடைவதாகவும் ஆனால் அவரின் பாலியல் துணை 8 நிமிடங்களுக்குள்ளாகவுமே உச்சநிலை அடைவதாகவும் கொண்டால் இது விந்து முந்துதல் அன்று.
பத்துப் பேரில் ஒருவர் (1/10) என்ற விகிதத்தில் மிகப் பரவலாக ஆண்களைப் பாதிக்கப்படும் நோய் எதுவென்றால் அது விந்து முந்துதல்தான்.
விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature Ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.
- ஆண்மைக் குறைபாட்டினால் ஏற்படுவதல்ல.
- இங்கு ஆண் உறுப்பு விறைப்படுவதில் எவ்வித பிரச்சனையும் இருப்பதில்லை. விறைப்படுவதில் குறைபாடானது Erectile dysfunction எனப்படும்
- பாலுறவின் நாட்டத்திலும் குறைவிருப்பதில்லை.
- பொதுவாக இது இளமைப் பருவத்தில் அதிகம் ஏற்படுகிறது. பாலியல் உணர்வுகள் அதிகமாகவும் தீவிரமாகவும் இருக்கும் பருவத்தில் பலரையும் பாதிக்கிறது.
- காலம் செல்லச் செல்ல, வயது முதிர முதிர தங்கள் உணர்வுகளைக் கட்டில் கொண்டு வர பல ஆண்களால் முடிகிறது.
- இருந்தபோதும் பல நடுத்தர வயதில் உள்ள ஆண்களையும் இது பாதிப்பதும் உண்மையே.
- விந்து முந்துவதாகக் கருதும் ஆண்களுக்கு சராசரியாக 1.8 நிமிடங்களில் வெளியேறியது.
- எவ்வித பிரச்சனையும் இல்லை, சாதாரணமாக வெளியேறுகிறது எனக் கருதும் ஆண்களுக்கு 7.3 நிமிடங்கள் தாக்குப் பிடிக்கத்தக்கதாக இருந்தது.
- இருந்தபோதும் 25 நிமிடங்கள் வரை விந்து வெளியேறாது உறவில் ஈடுபட முடிந்த சில ஆண்களும் கூட தமக்கு விந்து விரைவில் வெளியேறிவிடுவதாகக் கவலைப்பட்டதுண்டு.
- 2.5 சதவிகிதமான ஆண்களுக்கு பெண் உறுப்பினுள் நுழைந்த பின்னர் 90 செகண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாதிருந்தது.
இருந்தபோதும் 20 நிமிடங்களுக்குக் குறைவான நேரம் மட்டுமே நீடிக்கும் உடலுறவைப் பெரும்பாலான தம்பதிகள் திருப்பதியற்றதாகக் கருதுகிறார்கள்.
பலவற்றையும் கருத்தில் எடுக்கும்போது 10 நிமிட நேரத்திற்குள் விந்து வெளியேறிவிடுவதை விந்து முந்துதல் எனப் பெரும்பாலான மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
இன்னும் சற்று பொதுப்படையாக சிந்தித்தால் நேரக் கணக்குகளைவிட திருப்தியடையும் உணர்வு முக்கியம் எனலாம். ஆண் அல்லது பெண் உச்ச கட்டம் சீக்கிரமாக எட்டி முடிந்துவிடுகிறது எனக் கருதினால் அங்கு விந்து முந்துதல் இருப்பதாகக் கருதலாம்.
- இது ஏற்படுவதற்குக் காரணம. என்ன? ஒருவன் தனது பாலியல் உறவுகளின் ஆரம்ப கட்டங்களில் இதற்கு ஆற்றுப்படுத்தப்படுவதாகச் சிலர் கருதுகிறார்கள்.
காலத்தை விரயமாக்காமல் அவசரமாக உறவு கொண்டு விந்நை வெளியேற்றிய நிகழ்வுகளால் பதனப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.
ஆனால் அவ்வாறு இல்லாத பலருக்கும் விந்து முந்துதல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
- மற்றொரு காரணம் இது பரம்பரையில் வருவதாகவும் இருக்கலாம். விந்து முந்தியவரகள் பலரது தகப்பன்மாருக்கும் இது இருந்தது தெரிய வந்தது.
- மனப்பதற்றம் முக்கிய காரணமாக இருப்பதையும் மறுக்க முடியாது. மனப் பதற்றம் பதகளிப்பு ஆகியவை விந்து விரைந்து வெளியேறக் காரணமாகின்றன.
இதனால்தான் சிலர் மது அருந்தி உறவு கொள்கிறார்கள். அதனால் தமது மனத்தடைகளை அகற்ற முடியும் என எண்ணுகிறார்கள். ஆனால் மதுவானது ஆர்வத்தைத்த தூண்டுமளவு ஆற்றலை மேம்படுத்துவதில்லை. அத்துடன் வேண்டாத பல பக்க விளைவுகளையும் தீங்குகளையும் கொண்டுவரும் என்பது தெரிந்ததே.
webmd.ல் மனதை அடக்கும் முறைகள் பற்றிப் படிக்க கிளிக் பண்ணுங்கள்