ஆடு, கோழி, மீன், போன்ற மாமிச உணவுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவகையான சத்துக்கள் காணப்படுகின்றன.
கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆட்டு மாமிசம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொருவிதமான பலனை தருவதாக உள்ளது.
இதயத்திற்கு பலம்
ஒரு சிலருக்கு தலைக்கறி மிகவும் விருப்பமாக இருக்கும். தேங்காய் பாலில் சமைத்து சாப்பிடுவார்கள். இந்த தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கின்றனர் மருத்துவர்கள். தலை தொடர்பான நோய் இருந்தால் அறவே அற்றுப்போகுமாம். குடலுக்கு பலம் கிடைக்கும். ஆட்டின் கண் சாப்பிட்டால் பார்வை கோளாறு உள்ளவர்களுக்கு பலம் கிடைக்கும். கண் கோளாறுகள் சரியாகும். ஆட்டின் நாக்கு உடல் சூட்டை அகற்றும். சருமத்திற்கு இளமை தரும் பளபளப்பை தரும்.
ஆண்மை பெருகும்
ஒரு சிலர் ஆட்டின் மூளையை தனியாக வறுத்து சாப்பிடுவார்கள். இதன் சுவையே அலாதியானது. இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். புத்தி தெளிவடையும், நினைவாற்றல் அதிகரிக்கும். விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும். இதேபோல் ஆட்டின் குண்டிக்காய் சமைத்து சாப்பிட இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும்.
கபநோய் நீங்கும்
கப நோய் பாதிப்புள்ளவர்கள் ஆட்டின் மார்பு பகுதியில் உள்ள கறியை சாப்பிட்டலாம். நெஞ்சு எலும்பு கறியை சமைத்து உண்பதால் மார்புக்கு பலம் கிடைக்கும். மார்பு பகுதியில் உள்ள புண்கள் ஆறும். ஆட்டு இதயம் சாப்பிட்டால் நமது இதயத்திற்கு பலம் கிடைக்கும். மன ஆற்றல் பெருகும்.
உடலுக்கு குளிர்ச்சி
ஆட்டின் நுரையீரல் சாப்பிட்டால் உடல் வெப்பம் தணியும், நுரையீரலுக்கு வலு கிடைக்கும். அதேபோல் ஆட்டின் கொழுப்பு இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். வயிற்றில் உள்ள எந்தவித புண்களையும் ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. கால், மூட்டு நோவு உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து குடிக்கலாம். இதனால் கால்களுக்கு வலிவு கிடைக்கும்.