Home ஆண்கள் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சிக்கான சிகிச்சை என்ன?

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சிக்கான சிகிச்சை என்ன?

588

காரணம் எதுவாக இருந்தாலும், உங்களுக்கு ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி இருந்தால், பின்வருவன பரிந்துரைக்கப்படுகின்றன:

  • அழற்சி இருக்கும் போது சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் சோப்புக்குப் பதிலாக ஒரு ஈரப்பதமூட்டும் கிரீமை அல்லது ஆயின்ட்மென்ட்டை (ஒரு இளக்கு மருந்து) பயன்படுத்தலாம்.
  • உங்கள் ஆணுறுப்பைச் சுத்தப்படுத்துவதற்கு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள். அதன் பிறகு, ஆணுறுப்பை மெல்ல மெல்ல உலரவிடுங்கள்.
  • சிகிச்சை எடுக்கப்பட்டு வரும் காலத்தில், உப்புநீரால் கழுவுதல் ஆறுதலளிப்பதாகச் சிலர் கூறுகின்றனர்.

சிகிச்சையானது ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியின் காரணத்தைப் பொறுத்து அமையும். பின்வரும் சிகிச்சைகள் பொதுவாகக் கொடுக்கப்படுகின்றன:

  • இருதிரிபு காளானால் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சி ஏற்பட்டால், அதற்கு வழங்கப்படும் சிகிச்சைகளுள் anti-yeast cream or a course of anti-yeast tablets (ஆண்டி- ஈஸ்ட் கிரீம் அல்லது ஒரு கோர்ஸ் அளவு கொண்ட ஆண்டி – ஈஸ்ட் மாத்திரைகள்) என்பது ஒரு பொதுவான சிகிச்சை ஆகும்.
  • Antibiotics (ஆண்டிபயாடிக்ஸ்), பாலுறவு மூலம் கடத்தப்படும் சில குறிப்பிட்ட நோய்த்தொற்றுகள் உள்படக் கிருமிகளால் (பாக்டீரியா) ஏற்படும் நோய்த்தொற்றை அழித்தொழிக்கும்.
  • அழற்சியைக் குறைப்பதற்கான ஒரு மிதமான steroid cream (ஸ்டீராய்டு கிரீம்)ஆனது, ஒவ்வாமைகளால் அல்லது எரிச்சலூட்டும் பொருட்களால் ஏற்படும் ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சிக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. சில நேரங்களில், நோய்த்தொற்றால் ஏற்படும் அழற்சியைக் குறைப்பதற்கு ஈஸ்ட் எதிர்ப்பு மருந்துடன் அல்லது ஆன்ட்டிபயாட்டிக் மருந்துடன் சேர்த்துக் கூடுதலாக ஒரு ஸ்டீராய்டு கிரீம் பயன்படுத்தப்படுகிறது. (குறிப்பு: ஆணுறுப்பின் நுனியில் (ஆணுறுப்பு மொட்டு) ஏதாவது நோய்த்தொற்று இருந்தால், அப்போது ஸ்டீராய்டு கிரீம் மட்டுமே பயன்படுத்தப்படக் கூடாது, ஏனெனில் ஸ்டீராய்டுகள் நோய்த்தொற்றை மிகவும் மோசமாக்கலாம்.)

ஆணுறுப்பு மொட்டுத் தோலழற்சியின் சில நேர்வுகளைத் தடுப்பதற்குக் கீழே உள்ள சில உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்:

  • ஆணுறுப்பின் நுனியை (ஆணுறுப்பு மொட்டு) தினமும் கழுவ வேண்டும். குளியல் தொட்டியில் அல்லது குளியல் அறையில் இருக்கும் போது, ஆணுறுப்பின் முன்தோலை மெல்ல மெல்ல பின்னோக்கி இழுங்கள். அதன் பிறகு, வெறும் நீரால் அல்லது சோப்பு மற்றும் நீரால் ஆணுறுப்பு மொட்டை மெல்ல மெல்ல சுத்தப்படுத்துங்கள். உங்கள் உள்ளாடைகளை அணிவதற்கு முன்னதாக ஆணுறுப்பு மொட்டு உள்பட ஆணுறுப்பு உலர்வாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.
  • கருத்தடுப்பு உறையுடன் தொடர்புடைய அறிகுறிகளாக இருந்தால், எளிதில் பாதிக்கப்படக்கூடிய மென்மையான தோலுக்கு எனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கருத்தடுப்பு உறையை பயன்படுத்த முயற்சியுங்கள்.
  • மென்மையான தோலுக்கு எரிச்சல் அளிக்கக்கூடிய வேதிப்பொருட்களுடன் நீங்கள் பணியாற்றினால், கழிப்பறைக்குச் செல்வதற்கு முன்னதாக உங்கள் கைகளைக் கழுவுங்கள்.
  • ஒரு புதிய பாலுறவுத் துணைவருடன் நீங்கள் பாலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஒரு கருத்தடுப்பு உறையைப் பயன்படுத்துங்கள்.