ஜீன்ஸ் அணிந்தால் திருநங்கை குணமுடைய குழந்தை பிறக்கும் என்று ஒரு பேராசிரியர் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ரஜித் குமார் என்பவர் கேரள மாநிலம் கல்லடியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “ஒரு பெண், ஆண் போல உடை அணிந்தால், அவளுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும்? அந்தக் குழந்தைக்கு என்ன மாதிரியான குணம் இருக்கும்? நிச்சயமாக அவளுக்கு பிறக்கும் குழந்தை திருநங்கை குணம் கொண்டதாகவே இருக்கும்” என்று பேசியுள்ளார்.
மேலும், “கேரளாவில் ஏற்கெனவே 6 லட்சம் திருநங்கைகள் இருக்கிறார்கள். இப்போது, இங்குள்ள பெண்கள் எல்லாம் ஜீன்ஸ் அணிகிறார்கள்.
அப்பறம் எப்படி ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்? திருநங்கை குணம் கொண்ட குழந்தைதான் பிறக்கும். புரட்சி செய்யும் ஆண்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது” என்றும் கூறியுள்ளார்.