உடல் எடை குறைப்பு:பல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது.
அத்துடன் பல பிரபலங்களும் இட்லி டயட்டால் உடல் எடை குறைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இட்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
உடலின் ஆரோக்கியம் ஊட்டச்சத்துக்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு உணவுகளை சாப்பிடுகிறார் என்பது கணக்கில் சேர்க்கப்படாது. மாறாக எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்டார் என்பதே முக்கியமானது. ஒரே ஒரு இட்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.
1. கலோரிகள் – 65
2. வைட்டமின் எ, பி
3. கார்போஹைடிரேட்
4. புரத சத்து
5. இரும்பு சத்து
6. பொட்டாசியம்
7. அமினோ அமிலங்கள்
8. நார்சத்து
உடல் எடையை குறைக்குமா..?
இப்போது பலரின் கேள்விக்கும் விடை தெரிந்துவிடும். இட்லி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா..? இது உண்மைதாங்க. தினமும் காலையில் அல்லது மாலையில் இட்லிகளை சாப்பிட்டால் ஓரே மாதத்தில் 4 கிலோ வரை எடையை குறைக்க முடியும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக தினமும் 3 வேலைகளும் இட்லியை சாப்பிட கூடாது. மற்ற உணவுகளை காட்டிலும் இதில் கொழுப்பு சத்துக்கள் மிகவும் குறைவாக உள்ளது.
அத்துடன் சீரான அளவே கலோரிகள் உள்ளது. எனவே இது உங்கள் உடல் எடை கூடவதை தடுக்கும். அத்துடன் மிக கச்சிதமான உடல் அமைப்பை தரும்.
ஏன் உடலுக்கு நல்லது..?
பொதுவாக வேக வைத்த உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு அதிக கொழுப்புகள் சேராது. ஒரு இட்லியில் சுமார் 65 கலோரிகளே இருக்கும்.
எனவே இது 15 GM அளவே கரைக்க கூடிய கொழுப்புகளை உடலுக்கு கொடுக்கும். அதனால் இட்லியை இதயம் நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் பெரிதும் உணவில் சேர்த்து கொள்ளலாம். இட்லியை சாம்பாருடன் சேர்த்து சாப்பிடுவது அதிக நலனை தரும். இட்லியும் சாம்பாருமே நல்ல பொருத்தமான உணவு ஜோடிகளாக இன்றளவும் அதிக பேரால் கருதப்படுகின்றது.