Home சூடான செய்திகள் கட்டிலில் இதை மட்டும் செய்யாதிர்கள் அப்புறம் உறவு கட் தான்

கட்டிலில் இதை மட்டும் செய்யாதிர்கள் அப்புறம் உறவு கட் தான்

87

சூடான செய்திகள்:சரியாக பழகாத ஆணையும் பெண்ணையும் ஓர் அறைக்குள் போட்டு கதவை பூட்டுவது போலத்தானே பல முதலிரவுகள் நடைபெறுகின்றன? யாரும் அதனை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை.

பசி, தூக்கம், பாலுணர்வு… இம்மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள். இதில் பசியும் தூக்கமும் உயிரையும் உடலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியம். பாலுணர்வு சந்ததிகளை உருவாக்குவதற்குத் தேவையானது. அதனால், தாம்பத்திய முறையாக கற்றுக்கொள்வதில் எந்த குற்றமும் கிடையாது. கற்றுக்கொள்ளாமல், திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளை பார்த்து ஏங்கித் தவிப்பதில் பயனில்லை.

கணவனும் மனைவியும் திருமணத்துக்கு பின் மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும். மன உறவு சரியாக இருந்தால்தான் தாம்பத்தியம் சரியாக அமையும். முதலிரவின் போது கணவன், மனைவியின் எண்ணத்தை புரிந்து நடந்து கொள்வது முக்கியம். வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயலக்கூடாது. முதலிரவு என்பது உறவின் தொடக்கமே. அதன் பின்னால் பல இரவுகள் அவர்களுக்கு காத்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

‘முதலிரவில் தம்பதி உடனே கட்டிலில் படுக்காமல், நிறைய பேசவும் பல விளையாட்டுகளை ஆடவும் வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு செய்யும் போது இயற்கையாகவே தாம்பத்திய ஈடுபாடு வரும். கட்டாயமாக தாம்பத்தியம் கொள்ள முயலும் ஆண் மீது பெண்ணுக்கு வெறுப்பும் பயமுமே ஏற்படும். மகிழ்ச்சியான மனநிலையில் உறவில் ஈடுபடும் போது, ரிலாக்சாக இருப்பதால் பெண்ணுறுப்பில் போதுமான திரவம் சுரக்கும்.

இதனால் இணக்கத்துடன் உறவு கொள்ள முடியும். வலியோ, எரிச்சலோ பிறப்புறுப்பில் ஏற்படாது. முதலிரவை பற்றி அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். மன ஒற்றுமையும், புரிதலும் இருவருக்கும் சரியான முறையில் இருந்தாலே தாம்பத்திய உறவும் அமோகமாக இருக்கும்.