பாலியல் தகவல் :நிறைய நாடுகளில் ஓரினச் சேர்க்கையை அனுமதித்து விட்டார்கள். ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக் கூட அனுமதிக்கிறார்கள்.
நம் நாட்டிலோ இது குறித்து அறியாமையும், பயமும், நிறைய சந்தேகங்களும் இன்னும் இருக்கின்றன. சிலர் வித்தியாசமான குணங்களுடன் பிறப்பார்கள். சிலர் இடது கைப் பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். அது போல ஓரினச் சேர்க்கையும் சிலரின் இயல்பாக இருக்கும்.
ஜீன்களில் ஏதாவது பிரச்னை என்றாலும் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போது தாயின் செக்ஸ் ஹார்மோனில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலும் இப்படிப்பட்டவர்களாக மாற வாய்ப்புள்ளது. அம்மா மீது பையனுக்கு ஏற்படும் வெறுப்போ, அப்பா மீது மகளுக்கு ஏற்படும் வெறுப்போ எதிர் பாலினத்தின் மீதான வெறுப்பாக மாறிவிடுகிறது.
அவர்கள் காலப்போக்கில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்களாகக் கூடும். 10 பேர் ஒன்றாக இருக்கிறார்கள்… அவர்களில் 8 பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றால் மற்ற இருவரும் அப்படியே மாறிவிடுகிறார்களாம். இதை ‘Peer Influence Theory’ என்கிறார்கள்.
இந்தக் கருத்துகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. எந்தக் காரணத்தால் இப்படியான ஈர்ப்பு வருகிறது என்பது இன்னும் தெள்ளத் தெளிவாக அறியப்படாததாகவே இருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்களில் பலரும் படித்த அறிவாளிகள், புத்திசாலிகள், திறமைசாலிகள். அவர்களால் சமூகத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை மற்றவர்கள் உணர வேண்டும்.
அவர்களும் சாதாரண மனிதர்களே. அவர்களைப் பார்த்து அச்சப்பட தேவையில்லை. அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தை குற்றமாகக் கருதவும் தேவையில்லை. ஒருவேளை இந்த உறவு சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டால் வெளியில் சொல்லாமல் மறைப்பதால் வரும் பல உளவியல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.