காமசாஸ்திரம் சொல்லும் தகவல்:இன்றைய உலகில் நமது அனைத்து கேள்விகளுக்குமே இணையத்தில் பதில் உள்ளது. சொல்லப்போனால் நமது வாழ்க்கை பெரும்பாலும் நம்பியிருப்பது இன்டர்நெட்டைதான். நமது திருமணம் கூட இப்போதெல்லாம் இணையத்தில் பொருத்தம் பார்த்துதான் நடத்தப்படுகிறது. இப்பொது நமக்கு இணையம் எப்படி இருக்கிறதோ அப்படி நம் முன்னோர்களின் அனைத்து கேள்விகளுக்கும் அவர்களுக்கு பதிலாய் இருந்தது நமது வேதங்களும், சாஸ்திரங்களும்தான்.
நமது சாஸ்திரங்களில் திருமணம் மற்றும் கலவி பற்றிய தகவல்களையும், பொருத்தங்களையும் அறிய உருவாக்கப்பட்டதுதான் காமசாஸ்திரம். பொதுவாகவே காமசாஸ்திரம் என்றால் அது கலவி பற்றிய தகவலை மட்டும்தான் கொண்டிருக்கும் என்பது பரவலாக இருக்கும் கருத்து. ஆனால் உண்மையில் காமசாஸ்திரம் என்பது திருமணபந்தம் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய பல அற்புத தகவல்களை அரிய புத்தகமாகும். ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான பல குறிப்புகள் இதில் உள்ளது. அதன்படி ஒருவர் எப்படிபட்ட பெண்ணை மணந்துகொண்டால் அவர் அதிர்ஷ்டசாலியாக வாய்ப்புள்ளது என்பதை பற்றியும் இந்த நூலில் உள்ளது.
தகுதி 1 மனைவியாக கூடிய ஒரு பெண் தன் கணவனின் குடும்பத்திற்கு இணையான அந்தஸ்துள்ள குடும்பத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். இது பொருளாதார நிலை பற்றியதல்ல அதுபோன்ற குடும்பத்தில் இருந்து வரும்போது அவர்களின் பழக்கவழக்கங்களும், மாண்பும் இருக்குமென சாஸ்திரங்கள் கூறுகிறது.
தகுதி 2 அந்த பெண் நிச்சயம் அறிவில் சிறந்தவளாகவும், உலகில் நடக்கும் சம்பவங்களை கவனிப்பவளாகவும் இருக்க வேண்டும். பெண்ணின் கல்வியும், அறிவும் சமூகத்தின் மீதான அவளின் அக்கறையை காட்டும்.
தகுதி 3 ஒரு பெண் தன்னுடைய சுற்றப்புறத்தை பற்றியும் அதைசுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றியும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி உயர்வு, தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் பண்புடன் பழகவேண்டும்.
தகுதி 4 ஒரு பெண் தான் சார்ந்த மதத்தை மதிக்க வேண்டும் மற்றும் அதன் சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களை புறந்தள்ளாமல் இருக்கவேண்டும். தன்னுடைய சமூக மற்றும் குடும்ப பொறுப்புகளை தட்டிக்கழிக்ககூடாது.
தகுதி 5 பெண்ணின் ஆன்மா என்பது மிகவும் புனிதமானது. பணத்தை சேமித்து தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் லக்ஷ்மிதேவியாக இருப்பவள் பெண். சரஸ்வதி தேவியை போல இனிமையான மற்றும் தூய்மையான புன்னகை உள்ள பெண் உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.
தகுதி 6 அனைத்து நன்மை, தீமைகளையும் கற்றறிந்த ஒரு பெண் அனைத்து நியாத்தையும் அறிந்தவர். அவள் தன் கணவருக்கு ஒரு மந்திரி போல ஆலோசனைகளை வழங்குவாள். குடும்பம் என்னும் ராஜ்ஜியத்தை நிர்வகிக்கும் சிறந்த மந்திரியாக இருப்பாள்.
தகுதி 7 உடன்பிறந்தவர்களுடன் வளர்ந்த ஒரு பெண் மிகவும் பொறுமைசாலியாக இருப்பார் சொல்லப்போனால் பூமாதேவியை போல. அவர்கள் குழந்தைகளை சிறப்பாக பார்த்துக்கொள்வார்கள், உறவுகளையும், உரிமைகளையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் தயக்கம் காட்டமாட்டார்கள்.
தகுதி 8 தன்னுடைய அன்பு மற்றும் ஆசைகளை வெளிப்படையாக கூற தெரிந்த பெண் கணவனின் அன்பை எளிதில் பெற்றுவிடுவார்கள். அவர்களின் வசசேகரத்தை இந்த குணம் அதிகரிக்கும்.
தகுதி 9 வயதில் மூத்தவர்களை நிச்சயம் மதிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும். அவர்களின் அறிவுரைகளையும், அனுபவத்தையும் ஏற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பத்திற்கும் நன்மையை வழங்கும்.
தகுதி 10 கடினமான சூழ்நிலைகளை புரிந்துகொள்ளும் வலிமையான மனம் கொண்டவராக இருக்கவேண்டும். குடும்பத்தின் மோசமான தருணங்களில் இருந்து அதனை எப்படி வெளியே கொண்டுவருவது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்களது அன்பும், ஆதரவும் எந்த நிலையிலிருந்தும் குடும்பத்தை மீட்டெடுக்கும்