Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் முகப்பரு தழும்புகளை போக்க இலகுவான முறை

பெண்களின் முகப்பரு தழும்புகளை போக்க இலகுவான முறை

53

பெண்கள் அழகு குறிப்பு:ஒவ்வொருவருக்கும் தங்கள் அழகை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முகப் பொலிவிற்கு இயற்கையான பொருட்களை மட்டும் நம்மால் பயன்படுத்த முடியும். இதன்மூலம் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு உள்ளிட்டவற்றை நீக்க முடியும். இதற்காக அற்புதமான மாஸ்க் ஒன்றை எப்படி தயாரிப்பது என்று இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள்:

* பேக்கிங் சோடா – சிறிய அளவு
* ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீ ஸ்பூன்

* தேன் – சிறிது

* எலுமிச்சை – பாதி அளவு

எப்படித் தயாரிப்பது:

ஒரு டம்ளரில் பாதி அளவு நீரை நிரப்ப வேண்டும். அதில் ஒரு டீ ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்க்கவும். மற்றொரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா போட்டு, அதில் ஏற்கனவே கலக்கப்பட்ட வினிகர் நீர் சேர்க்கவும். இதனுடன் தேன் சேர்த்து பேஸ்ட் போன்று ஆக்கலாம். பின்னர் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

எப்படிப் பயன்படுத்துவது:

முதலில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும். பின் தூய துணியால் துடைக்க வேண்டும். இதையடுத்து தயாரித்து வைத்த மாஸ்க்கை முகத்தில் தடவவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு தினசரி செய்து வந்தால், முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, முகப்பரு, தழும்பு மறைந்து முகம் புதுப்பொலிவு பெறும்.